Leo Movie Trailer : தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு டிரைலர் வெளியாகியது. அதில் விஜய் வழக்கம் போல மிரட்டி விட்டு உள்ளார்.
த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர் போன்றவர்களும் அசத்தி உள்ளனர். டிரைலர் வைத்து பார்க்கையில் படம் முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த இருக்கும் என கூறி வருகின்றனர். இந்த டிரைலரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியது தான் சற்று ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் தனது திரை பயணத்தில் தவறவிட 4 பெரிய பட்ஜெட் படங்கள்.! அதை நினைத்து புலம்பும் ரசிகர்கள்
இருபின்னும் டிரைலர் நல்ல வரவேற்ப்பை பெற்று பல சாதனைகளை உடைத்து புதிய சாதனை படைத்து வருகிறது. டிரைலர் பார்த்த பலரும் லியோ நிச்சயம் ஆயிரம் கோடி வசூல் கன்ஃபார்ம் என கூறி வருகின்றனர். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் ஒரு பதிவை போட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..
ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் இரண்டு மாதங்களில் மொத்தமாக 30 மில்லியன் வியூஸ் தான் ஆனால் 28 மணி நேரத்தில் 34 மில்லியன் பார்வையாளர்களை கடந்த லியோ அசத்தி உள்ளது மேலும் அவர் குறிப்பிட்டுள்ளது..
என்னவென்றால் தலீவர் என்னைக்கும் விஜய்க்கு முன்பாக ஜுஜுபீ தான் என பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் சண்டையை மூட்டி உள்ளார். இதற்கு பலரும் எதிர்பும், ஆதரவும் தந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இது லியோ படம் ஓடும் வரை இந்த செய்தி பூதாகரமாக வெடிக்கும் என பலரும் கூறி வருகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..