Leo sandy master : தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் விக்ரம் திரைப்படம் வெளியாகி 400 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது.
இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் பல மடங்காக அதிகரித்துள்ளது அது மட்டும் இல்லாமல் தமிழில் முதல் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஆகும் திரைப்படம் இதுவாக தான் இருக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.
அதேபோல் லியோ திரைப்படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்துள்ள சாண்டி மாஸ்டர் தன்னுடைய சமூக வலைதளத்தில் லியோ புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த புகைப்படத்தில் சாண்டி மாஸ்டர் சிக்ஸ் பேக் வைத்து வேற லெவலில் இருக்கிறார் அது மட்டுமில்லாமல் லியோவின் டாக் லைனையும் பதிவு செய்துள்ளார் Keep Calm & Wait for Loki’s Magic என பதிவிட்டுள்ளார். லியோ திரைப்படத்தில் சாண்டி மாஸ்டருக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் ஒரு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் வேற லெவலில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சாண்டி மாஸ்டர் முதன்முறையாக சிக்ஸ் பேக் வைத்துள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியமடைந்து வருகிறார்கள். மேலும் லியோ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.
படத்திற்கு இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்தலாம் என திட்டமிட்டு இருந்தது படக்குழு ஆனால் திடீரென இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் இருந்தார்கள் இந்த நிலையில் நாளை செகன்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என பட குழு வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.