Leo Poster : தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பல வருடம் கழித்து திரிஷா நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின் கௌதம் வாசுதேவ மேனன், பிரியா ஆனந்த், இன்னும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளார்கள்.
இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தை இயக்கினார் அந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது இதனால் லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் பல மடங்காக அதிகரித்துள்ளது.
மேலும் லியோ திரைப்படத்தின் ஆடியோ லான்ச் முப்பதாம் தேதி நடைபெற இருக்கிறதாம், இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் கண்டிப்பாக ஏதாவது குட்டி ஸ்டோரி சொல்லுவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் அந்த குட்டி ஸ்டோரி பலருக்கு பதிலடியாக இருக்கும் எனவும் கூறுகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
இந்த நிலையில் லியோ திரைப்படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட் வெளியாகிக் கொண்டிருக்கின்றன விரைவில் டீசர், ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது அப்படி இருக்கும் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு லியோ திரைப்படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியானது அந்த போஸ்டரில் விஜய் தீப்பொறி பறக்க கத்திக்கு சாணை பிடிக்கிறார்.
இந்த நிலையில் தற்பொழுது புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது இந்த போஸ்டர் ரசிகர் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது அது மட்டும் இல்லாமல் போஸ்டரில் விஜய் சஞ்சய் தத் கழுத்தைப் பிடித்து திருப்புவது போல் இருக்கிறது இதோ அந்த போஸ்டர்.