Leo Poster : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் மாநகரம், மாஸ்டர், விக்ரம், கைதி என மிகப் பெரிய ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இதில் விக்ரம் திரைப்படம் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்தநிலையில் தற்பொழுது விஜய் நடிப்பில் லியோ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா நடித்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ஏற்கனவே வெளியாகிய ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் ஆடியோ லாஞ்ச் எப்பொழுது என காத்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் ஆடியோ லான்ச்சில் விஜய் குட்டி ஸ்டோரி கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த குட்டி ஸ்டோரி ஏதாவது சர்ச்சையை உண்டாக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சில் விஜய் ரசிகர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பர்மிஷன் இல்லாமல் பேனர் வைக்க கூடாது எனவும் விஜய் மக்கள் இயக்க மன்ற நிர்வாகிகள் மாவட்டத்திற்க்கு 200 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் எனவும் பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் செய்யக்கூடாது எனவும் கண்டிஷன் போட்டுள்ளார்கள். இந்த நிலையில் லியோ திரைப்படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் லோகேஷ் கனகராஜ் சில விஷயங்களை மறைத்து வைத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் போஸ்டரில் மறைத்து வைத்துள்ள விஷயம் என்னவென்றால் அந்த துப்பாக்கியில் MARK IV என பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை விக்ரம் எனவும் கூறலாம் ஏனென்றால் VIKRAM என்ற மீனிங் வருகிறது இதில் ஏதோ ஒரு தகவலை மறைத்து வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ் .ஒருவேளை விஜய் ரா ஏஜண்டாக இந்த திரைப்படத்தில் நடித்திருக்கலாம் என தெரிகிறது.