Leo OTT release : லியோ OTT ல் எப்பொழுது தெரியுமா.?

leo ott release date
leo ott release date

Leo OTT release date : விஜயை வைத்து லோகேஷ் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியிருந்தார் பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக லியோ என்ற திரைப்படத்தை விஜயை வைத்து இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார்.

அதேபோல் விஜய் பார்த்திபன் மற்றும் லியோதாஸ் என்ற இரண்டு கதாபாத்திரத்தில் தன்னுடைய அசால்டான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் அதேபோல் படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் மடோனா செபஸ்டியன், ஜார்ஜ் மரியான், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

லியோ திரைப்படமும் லோகேஷன் யுனிவர்சில் இணைந்துள்ளது அதேபோல் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வெளியானது வழக்கமாக விஜய் திரைப்படம் என்றாலே அறிமுகக் காட்சி பாடல்கள் சண்டைக்காட்சி என இடம்பெற்றிருக்கும் ஆனால் லியோ திரைப்படத்தில் பெரிதாக எதுவும் கிடையாது.

லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருந்து வருகிறது இதுவரை லியோ  திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, ஏழு நாள் முடிவில் 515 கோடி இருக்கும் எனவும் கூறுகிறார்கள் இந்த நிலையில் இந்தியாவில் மட்டும் 250 கோடியும், தமிழகத்தில் 150 கோடி வசூல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

அப்படி இருக்கும் நிலையில் லியோ திரைப்படம் வெளியாகி ஏழு நாட்களே ஆன நிலையில் நாலாவது வாரத்தில் லியோ திரைப்படம் OTT யில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளன முன்னணி OTT இணையதளமான நெட்பிளிக்ஸ் இணையதளம் தான் டிஜிட்டல் உரிமையை பெற்றுள்ளது இந்த நிலையில் நவம்பர் 17ஆம் தேதி அல்லது 21ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நவம்பர் நாலாவது வாரத்தில் தான் லியோ திரைப்படம் OTT யில் வெளியாகும் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதற்கு முன்பு வெளியாகிய குஷி, மார்க் ஆண்டனி, மிஸ் செட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நாலாவது வாரத்திலேயே OTT யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.