“லியோ” படத்தின் அடுத்த ஷூட்டிங் எங்கே.. எந்த தேதியில் தெரியுமா.. வெளிவந்த கசிந்த பரபரப்பு தகவல்

leo
leo

தோல்வியை காணாத இயக்குனர்களில் ஒருவர் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் கடைசியாக உலகநாயகன் கமலஹாசனை வைத்துக் கெடுத்த விக்ரம் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது. அதனை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க..

லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் உடன் கூட்டணி அமைத்து “லியோ” திரைப்படத்தை எடுத்து வருகிறார். முதல் கட்ட சூட்டிங் சென்னையில் சைலண்டாக நடந்து முடிந்ததை அடுத்து 180 பேர் கொண்ட குழு தனி விமானத்தின் மூலம் காஷ்மீருக்கு பறந்தனர். அங்கு கடும் குளிர் என்று கூட பார்க்காமல் படபிடிப்பு இரண்டு மாதங்களாக நடத்தியது இதில் ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்திருந்தனர்.

அதை அண்மையில் வீடியோவாக வெளியிட்டு மிரள வைத்தது தற்பொழுது சென்னை திரும்பிய லியோ படக்குழு மூன்றாவதாக ஷூட்டிங்கிற்கும் பிளான் போட்டுவிட்டது மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் கோலாகலமாக நடத்த இருக்கிறது. இதில் நடிகர் விஜய், திரிஷா, மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சஞ்சய் தத் போன்ற பல பிரபலங்கள் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மூன்றாவது கட்ட ஷூட்டிங் எப்பொழுது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி மார்ச் 29ஆம் தேதி நேற்று துவங்க இருந்தது ஆனால் சில மாற்றங்கள் செய்துள்ளது அதன்படி லியோ திரைப்படத்தின் அடுத்த ஷூட்டிங் வருகின்ற ஏப்ரல் நான்காம் தேதி சென்னையில் துவங்கப்பட இருக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் பணியின் தீவிரமாக வேலை செய்து வருகிறது. லியோ படக்குழு தொடர்ந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறது அதுபோல சென்னையில் நடக்கும் படப்பிடிப்பின் புகைப்படங்கள் வெளிவரவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.