கண்ணா 1 இல்ல மூணு லட்டு திங்க ஆசையா தெறிக்க விட போகும் லியோ படக்குழு..! எப்பொழுது தெரியுமா.?

leo update
leo update

Leo : தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர் இயக்கத்தில் வெளியாகிய கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது அதிலும் விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாக 500 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

இந்த நிலையில் ஏற்கனவே விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் இணைந்த லோகேஷ் 50 சதவீதம் லோகேஷ் படமாகவும் 50 சதவீதம் விஜய் படமாகவும் வெளியானது அதனால் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை ஆனால் இந்த முறை 100% லோகேஷ் திரைப்படமாக தான் வெளியாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல் லோகேஷ் எல் சி யூ வில் லியோ திரைப்படம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சமீபத்தில் வெளியான தகவலின் படி விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்தது போல் லியோ திரைப்படத்திலும் சூர்யாவுடன் தளபதி விஜய் பேசுவது போல் காட்சிகள் இருப்பதாகவும் அந்த காட்சி மரண மாஸாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

லியோ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன் அர்ஜுன், மிஸ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், திரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இதனிடையில் விஜயின் லியோ திரைப்படத்தின் வில்லனாக சஞ்சய் நடித்துள்ளார் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு கிலிம்ஸ் வீடியோவை பட குழு வெளியிட்டது. அதுமட்டுமில்லாமல் அந்த கிளிம்ஸ் வீடியோ பின்னணி இசை ரசிகர்களை ரசிக்க வைத்தது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஹெரால்ட் தாஸ் என்ற அர்ஜுனனின் கதாபாத்திரத்தின் வீடியோவை பட குழு கிளிம்ஸ் வீடியோவாக  வெளியிட்டது. அதேபோல் இதன் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பிரபலங்களின் பிறந்தநாளை முன்னிட்டு இதுபோல் வீடியோவை பட குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் அடுத்ததாக செப்டம்பர் 10ஆம் தேதி அனுராக் காஷ்யப் பிறந்த நாளும் பிரியா ஆனந்த் செப்டம்பர் 17ஆம் தேதியும் இயக்குனர் மிஷ்கின் பிறந்தநாள் செப்டம்பர் 20ஆம் தேதி வர இருக்கிறது அதனால் அடுத்த மாதம் லியோ திரைப்படத்திலிருந்து அடுத்த அடுத்த மூன்று மாசான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.