“லியோ” திரைப்படத்தில் விஜய் மிரட்டுவார்.. நடிகர் யாஷ் சொன்னதை கேட்டு குதூகாலமடையும் தளபதி ரசிகர்கள்

vijay-
vijay-

தமிழ் சினிமாவில் விரல்விட்டு என்னும் அளவிற்கு தான் மாஸ் ஹீரோக்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் குடும்ப செண்டிமெண்ட் கதையாக இருந்தது அதனால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது..

தொடர்ந்து சிறப்பாக ஓடியதால் வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல லீவு புதிய சாதனை படைத்தது இந்த வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் உடன் மீண்டும் இணைந்து “லியோ” திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட வருகிறது.

இதில் விஜய் உடன் இணைந்து சஞ்சய்தத், பிரியா ஆனந்த், திரிஷா, மிஸ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், சந்திப் கிஷன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். லோகேஷின் மற்ற படங்களைப் போலவே இந்த திரைப்படமும் போதை பொருளை மையமாக வைத்து உருவாகும் என சொல்லப்படுகிறது.

அண்மையில் லியோ படத்தின் டைட்டில் வீடியோவை வெளியிட்டு பெரிய எதிர்பார்ப்பை தூண்டி விட்டது. இதை பலரும் பார்த்துக் கொண்டாடினார்கள் அந்த வகையில் கேஜிஎப் பட நடிகர் யாஷ் “லியோ” படத்தின் டைட்டில் வீடியோவை பார்த்து  மிரண்டு போய் விஜய்க்கு போன் பண்ணி பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது..

லியோ படத்தில் செம்ம கிளாஸ்ஸாக இருப்பதாக நிகழ்ந்து பேசி உள்ளாராம் இப்பொழுதே இந்த படம் 100% வெற்றி உறுதி என்பது போல பல விஷயங்களை விஜயிடம் பேசி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு டாப் ஹீரோவே லியோ வீடியோவை பார்த்து இப்படி சொல்லுவதால் நிச்சயம் “லியோ” திரைப்படம் மிகப் பெரிய ஒரு வெற்றியை பதிவு செய்யும் என தளபதி அவர்கள் சொல்லி கொண்டாடி வருகின்றனர்.