“லியோ” படம் இப்படிதான் இருக்கும்.? தளபதி ரசிகர்களுக்கு செம்ம அப்டேட் கொடுத்த மிஷ்கின்

leo
leo

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குனராக ஓடிக் கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இதுவரை விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் படங்களை எடுத்திருக்கிறார் ஆனால் அந்த படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் தான் குறிப்பாக கமலை வைத்து கடைசியாக எடுத்த “விக்ரம்” திரைப்படம்..

இந்திய முழுவதும் நல்ல வரவேற்ப்பை பெற்று 400 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது. அதனைத் தொடர்ந்து மற்றொரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுக்க விஜய் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், த்ரிஷ..

, பிக்பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். லியோ படத்தின் இரண்டு கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது.

குறிப்பாக விக்ரம் படத்தில் இருக்கும் சண்டை காட்சிகளை விட பல மடங்கு லியோ படத்தில் ஆக்சன் காட்சிகள் நிறைந்து விழுகின்றதாம். இதனால் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனரும், நடிகருமான மஷ்கின் லியோ படத்தில் நடித்து வருகிறார் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் லியோ திரைப்படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார்.

அதில் அவர் சொல்லி உள்ளது.. லியோ திரைப்படம் மிகப்பெரிய  அதிரடி ஆக்சன் படமாக உருவாகி வருகிறது என கூறினார். லோகேஷ் ஏற்கனவே பக்கா ஆக்சன் திரைப்படம் என்றார் இருவரும் அதே சொல்லி உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்பொழுது அதிகரித்து காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.