யோ லோகேஷ் அத மட்டும் செய்யாத.! ஸ்ட்ரிக்டாக கண்டிஷன் போட்ட விஜய்.! அதனாலதான் இவர தளபதின்னு சொல்றாங்க..

leo
leo

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் இவர் இயக்கத்தில் நடிப்பதற்காக பல நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது இந்த திரைப்படத்தில் கமலஹாசன் நடித்திருந்தார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ்  தற்போது தளபதி விஜய் அவர்களை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து ஒட்டுமொத்த இந்திய திரை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது விஜயுடன் இரண்டாவது முறையாக இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார். முதலில் மாஸ்டர் என்ற திரைப்படத்தை விஜயை வைத்து எடுத்திருந்தார்.

ஆனால் மாஸ்டர் திரைப்படம் 50% லோகேஷ் சாயலிலும் 50 சதவீதம் விஜய் சாயலிலும் இருந்தது ஆனால் லியோ திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் சாயலில் இருக்கும் என ஏற்கனவே தகவல் கிடைத்தது லியோ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட பட பிடிப்பு சென்னையில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது .

இந்த படபிடிப்பில் விஜய் திரிஷா சஞ்சய் தத் ஆகியோர்களும் கலந்து கொண்டுள்ளார்கள் இந்த நிலையில் மன்சூர் அலிகான், அர்ஜுன் ஆகியோரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என தகவல் கிடைத்தது. அதேபோல் தற்பொழுது விஜய் மற்றும் திரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளும் அர்ஜுன் மற்றும் விஜய் சம்பந்தப்பட்ட சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

இந்த திரைப்படத்தை மே மாதத்திற்குள் முடித்துவிட்டு போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற இருக்கிறது ஏனென்றால் வருகின்ற ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிடப்பட திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் லியோ திரைப்படத்துடன் எந்த ஒரு திரைப்படமும் மோதாமல் இருப்பதால் லியோ திரைப்படத்திற்கு மிகப்பெரிய வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர் மனோபாலா கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார். இந்த செய்தி ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இவரின் மறைவிற்கு விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்படி இருக்கின்ற நிலையில் விஜய் லியோ திரைப்படத்தில் நடித்த மனோபாலாவின் அனைத்து காட்சிகளும் இருக்க வேண்டும் என கண்டிஷன் ஆக லோகேஷ் அவர்களிடம் கூறிவிட்டாராம். ஏற்கனவே லோகேஷ் நேரம் கருதி சில காட்சிகளை நீக்க இருந்தார் ஆனால் தற்பொழுது மனோபாலாவின் காட்சிகளை மட்டும் நீக்கி விடாதீர்கள் என நேரடியாக விஜய் கூறிவிட்டதால் மனோ பாலாவின் அனைத்து காட்சிகளும் படத்தில இடம்பெறும் என தகவல் கிடைத்துள்ளது.

தளபதி விஜய்யும் மனோபாலாவும் மிகவும் நெருக்கமாக பழகி இருக்கிறார்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தான் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார் என தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.