300 கோடியில் உருவான லியோ.. த்ரிஷா – வின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா.?

Leo movie Trisha salary : தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகை என்ற அந்தஸ்தில் இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இடைப்பட்ட காலத்தில் சருக்களை சந்தித்தார், அதனால் சரியான பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

பிறகு மீண்டும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து தன்னுடைய இழந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்தினார் அதன் பிறகு இவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய், சாண்டி மாஸ்டர் அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த் என மிகப் பெரிய நட்சத்திரபட்டாலமே நடித்துள்ளார்கள், அதேபோல் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு த்ரிஷா  இணைந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். த்ரிஷா  விஜய் இதற்கு முன்பு ஆதி, கில்லி, குருவி ஆகிய திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள்.

அதேபோல் லியோ திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. லியோ திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது இந்த நிலையில் திரிஷாவுக்கு இந்த திரைப்படத்தில் மிகவும் வலுவான கதாபாத்திரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைப்போல் லியோ திரைப்படம் கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது இதில் விஜயின் சம்பளம் 100 கோடிக்கு மேல் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது த்ரிஷா  வின் சம்பள விவரம் தெரியவந்துள்ளது த்ரிஷா  இந்த திரைப்படத்திற்காக 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் திரிஷா அடுத்ததாக நடிக்க இருக்கும் மணிரத்தினத்தின் திரைப்படத்தில் 12 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது அப்படி 12 கோடி சம்பளம் வாங்கி விட்டால் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தை பிடித்து விடுவார் திரிஷா.

Exit mobile version