மாஸ்டர், விக்ரம் படத்தையே “லியோ” தூக்கி சாப்பிடும்.. நடிகர் அர்ஜுன் தாஸ் பேச்சால் உச்சகட்ட சந்தோஷமடைந்த ரசிகர்

leo
leo

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தி என பெயர் எடுத்தவர் தளபதி விஜய் இவர் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தோல்வியை காணாத இளம் இயக்குனர் லோகேஷ் கனராஜ்  உடன் கூட்டணி அமைத்து “லியோ” திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். லோகேஷ் இதுவரை எடுத்த படங்களில் பல ஹீரோக்கள் இருப்பது வழக்கம் தான்..

அதுபோல லியோ திரைப்படத்திலும் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், த்ரிஷா, பிக் பாஸ் ஜனனி என பல நட்சத்திர நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர் முதல் கட்ட சூட்டிங் சென்னையில் வெற்றி கரமாக முடிந்ததை அடுத்து இரண்டாவது கட்ட ஷூட்டிங்காக..

180 க்கும் மேற்பட்ட  நடிகர், நடிகைகள் பட குழுவினர் என அனைவரும் தனி விமானத்தின் மூலம் காஷ்மீருக்கு பறந்தனர். அங்கு கடும் குளிர் என்று கூட பார்க்காமல் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மறுபக்கம் லியோ படக்குழு தொடர்ந்து இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் புகைப்படங்களை வெளியிட்டு..

படத்திற்கான எதிர்பார்ப்பை மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் தூண்டி விட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் லோகேஷின் கைதி , மாஸ்டர், விக்ரம் போன்ற பல்வேறு படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ் பிரபல கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்பொழுது ரசிகர்கள் லியோ திரைப்படம் எப்படி இருக்கு என கூச்சலிட்டனர் அதற்கு பதில் அளித்த அர்ஜுன் தாஸ்.. லியோ படத்தில் கண்டிப்பாக லோகேஷ் கனகராஜின் சம்பவம் இருக்கு என கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது மேலும் அந்த வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகின்றனர்.