leo movie suspense : விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகிய திரைப்படம் லியோ இந்த திரைப்படத்தில் பல சர்ப்ரைஸ் சீன்கள் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து லோகேஷ் அவர்கள் ஏற்கனவே பேட்டியில் படத்தை பார்த்தாலே உங்களுக்கே பல சர்ப்ரைஸ் தெரியும் என கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் ட்ரைலரில் அதை எதையும் காட்டவில்லை.
லியோ திரைப்படத்தில் திரிஷா சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் என மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் இந்த நிலையில் படம் அக்டோபர் 19ஆம் தேதி நேற்று வெளியானது படத்தைப் பார்த்த பல நபர்கள் முதல் பாதி இருந்த லெவலுக்கு இரண்டாவது பாதி இல்லை என கூறினார்கள். முதல் பாதியை விறுவிறுப்பாக கொண்டு சேர்த்த லோகேஷ் இரண்டாவது பாதியை சொதப்பிவிட்டார் என கூறினார்கள்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் உள்ள சர்ப்ரைஸ் என்ன என்பதை இங்கே காணலாம்.
விஜயின் தங்கை:
லியோ திரைப்படத்தில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் என்றால் அது மடோனா செபஸ்டியன் தான் இவர் கடைசி வரை இந்த திரைப்படத்தில் இல்லை என்றாலும் விஜயின் தங்கையாக நடித்து மிரட்டி இருந்தார் அது மட்டும் இல்லாமல் அசத்தலான சண்டை காட்சிகளிலும் நான் ரெடி தான் பாடலுக்கு நடனம் ஆடுவது என இவரின் கதாபாத்திரம் பிரம்மிப்பாக இருந்தது.
திரிஷா விஜய்க்கு கொடுத்த லிப் கிஸ் :
திரிஷா விஜய்யை ஒரு காலகட்டத்தில் சந்தேகப்படுவார் ஒருவேளை இவர் தான் லியோ தாஸ் என சந்தேகப்பட்டு விஜயை பற்றி ஆராய ஆரம்பிப்பார் அது விஜய்க்கு தெரிய வர நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டது இப்படி சந்தேகப்பட தானா என எமோஷனலாக பேசுவார் இதனால் திரிஷா விஜய் வாயை அடைக்க தன வாயை வைத்து லிப் கிஸ் கொடுப்பார் இந்த காட்சியை மிகவும் அழகாக காட்டியிருந்தார் லோகேஷ் கனகராஜ்.
ஹைனா :
லியோ திரைப்படத்தில் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்ட காட்சிகள் என்றால் அது ஹைனா காட்சி தான் லோகேஷ் கனகராஜ் விஜயின் குணாதிசயத்தை ஹைனா கதாபாத்திரத்துடன்ஒன்றாக இருக்கும்படி அழகாக கதையை நகர்த்தியுள்ளார் ஹைனா கிளைமாக்ஸ் காட்சியில் அதை வைத்து மிகப் பெரிய டிவிஸ்ட் வைத்திருந்தார்கள் ஆனால் ஆரம்பத்தில் விஜய் ஹைனா ஒன்றை தத்தெடுத்து வளர்ப்பது போல் காட்டி இருந்தார்கள்.
ரெட்ரோ பாடல்கள் :
லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே தீம் மியூசிக் பாடல் கண்டிப்பாக இருக்கும் அதிலும் ரெட்ரோ பாடல் இல்லாமல் இருக்கவே இருக்காது கைதி திரைப்படத்திலிருந்து மாஸ்டர் விக்ரம் என அனைத்து திரைப்படத்திலும் ரெட்ரோ பாடல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் கருகரு கருப்பாயி மற்றும் தாமரை பூவுக்கும் ஆகிய இரண்டு பாடலையும் வைத்து காபி ஷாப்பில் சண்டை காட்சியை கையாண்ட விதம் மிகவும் அருமையாக இருந்தது.
அதிலும் கடைசியாக ரஜினி பாடலானா நான் பொல்லாதவன் பாடலை வைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
எல் சி யு :
லியோ திரைப்படம் எல் சி யு வில் இணைந்ததா இல்லையா என்று பலருக்கும் குழப்பம் வந்த நிலையில் அதை சர்ப்ரைஸ் ஆக காட்டியுள்ளார்கள் அதாவது கடைசி காட்சியில் போதைப் பொருளை ஒழிக்க இந்த ஒரு பேக்டரியை எரிச்சால் பத்தாது இது மாதிரி பல ஃபேக்டரியை எரிக்க வேண்டி இருக்கிறது என்பது போல் ஒரு குரல் ஒலிக்கும் அதுதான் கமல் குரல் இந்த கிளைமாக்ஸ் காட்சியில் கைதி திரைப்படத்தில் நடித்த ஜார்ஜ் மரியான் விக்ரமில் நடித்த மாயா விக்ரம் வாய்ஸ் என எல் சி யு வில் லோகேஷ் இணைத்து விட்டார்.