Leo Censor: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைக்கும் என திரை உலகினர்கள் கூறும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கும் லியோ படத்தில் விஜய்க்கு வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், கௌதாமேனன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளார்கள்.
விக்ரம் படத்தை தொடர்ந்து வெறித்தனமான ஆக்ஷன் காட்சிகளுடன் லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தினை உருவாக்கியிருக்கிறார். அதன்படி அதிரடியான பிளடி ஸ்வீட் காட்சிகளிடம் பெற்றிருப்பதனால் லியோ படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி பட குழுவினர்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சோலோவாக லியோ படம் வெளியாக இருப்பதனால் வசூலில் சாதனை படைத்து விடும் என்பதில் படக் குழுவினர்கள் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் கன்னடத்தில் சிவராஜ்குமாரின் கோஸ்ட் மற்றும் மேலும் மூன்று பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகிறது பிறகு தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் பகவத் கேசரி மற்றும் ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வரராவ் போன்ற படங்களும், மலையாளத்தில் திலீப் நடித்துள்ள பிக்பாக்கெட் அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகிறது.
பாலிவுட்டிலும் சில திரைப்படங்கள் விடுமுறை நாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது எனவே தமிழகத்தில் சோலோவாக வெளியாவதனால் கண்டிப்பாக வெற்றி பெற்று விடும். லியோ படத்தில் அதிக காட்சிகள் வன்முறையை கொண்டிருப்பதாக சென்சார் சில காட்சிகளை நீக்க வேண்டும் என சொல்லியிருப்பதாகவும் காட்சிகளை எடுக்கவில்லை என்றால் ஏ சான்றிதழ் தான் வழங்கப்படும் எனவும் கூறி இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.
குடும்பத்துடன் லியோ படத்தினை பார்த்தால் தான் இந்த படம் வெற்றி பெரும் என்பதற்காக லியோ படக்குழு யு/ஏ சான்றிதழை பெறுவதற்காக எதிர்பார்க்கின்றனர். எனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.