leo movie scene : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ இந்த திரைப்படத்தை பற்றி இன்று சமூக வலைதளத்தில் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் சினிமாவில் பல நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும் தற்பொழுது வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து நடித்து வந்த பல நடிகர்கள் வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள் அவர்களில் ஒருவர் பெங்களூரை சேர்ந்த சத்தியேந்திர ஆவார் இவர் ரஜினி, ரகுவரன் திரைப்படத்தில் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் ரஜினி, ரகுவரன் உட்பட பல சினிமா நடிகர்கள் இவருக்கு நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.
அழகில் ஹீரோயின்களை தோற்கடிக்கும் அஜித்தின் மகள்.! லைக்குகளை அள்ளும் புகைப்படம்
சமீபத்தில் நடிகர் சத்தியேந்திர ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் ரஜினி ரகுவரன் குறித்து பல சுவாரஸ்யமான தகவலை கூறி இருந்தார் மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் என்னை மரியாதையாக நடத்தக்கூடியவர் எனவும் பேசினார். இந்த நிலையில் சமீபத்தில் லியோ திரைப்படம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது அதில் அவர் கூறியதாவது லியோ திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக இருந்ததாகவும் இந்த சண்டை காட்சிகளை குறைத்து இருக்கலாம் எனவும் கூறினார்.
அது மட்டும் இல்லாமல் ஒரு போலீஸ் ஆபீசர் பாதுகாப்புக்காக வருகிறார் அவர் கடைசியில் எங்கு போனார் என்று லோகேஷ் காண்பிக்கவில்லை பத்து செகண்ட் கூட ஆகாது அதை காமித்திருக்கலாம் என கூறினார். ஒரு டாட்டா காண்பித்து விட்டு செல்வது போல் கூட காட்டி இருக்கலாம் என கூறினார்.
அது மட்டும் இல்லாமல் கழுதை புலியை வைத்து ஒரு சீன் வைத்திருந்தார்கள் ஆக்சுவலாக இந்த கழுதை புலியின் பெயர் சுப்பிரமணியம் ஆனால் கமல் நடித்த மூன்றாம் பிறை திரைப்படத்தில் ஸ்ரீதேவி ஒரு நாயை வளர்ப்பார் அதற்கு பெயர் சுப்பிரமணியம் அதைத்தான் லோகேஷ் இப்பொழுது பயன்படுத்தியுள்ளார் என அவர் தென்னதெளிவாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் இவர் பல விஷயங்களை புட்டு புட்டு வைத்துள்ளதால் இவரின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அது மட்டும் இல்லாமல் லியோ குறித்து இன்னும் சுவாரசியமான தகவலையும் அவர் கூறியுள்ளார் இதோ வீடியோ.