ஆட்டத்தை ஆரம்பித்த லியோ.! படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இப்படி ஒரு சாதனையா.! எந்த ஒரு இந்திய திரைப்படமும் செய்யாத சாதனை.

thalapathy vijay leo
thalapathy vijay leo

Leo : லோகேஷ் கனகராஜ் விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் இந்த நிலையில் அடுத்ததாக தற்பொழுது விஜய் வைத்து லீயோ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

அதற்கு காரணம் லியோ திரைப்படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள். திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் ஜனனி என பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளதால் படத்தில் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்து விநியோகஸ்தர்கள் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி முன்பதிவை தொடங்க இருப்பதாக வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆக ஆறு வாரங்கள் இருக்கும் நிலையில் முன்கூட்டியே முன்பதிவை தொடங்குவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

யுகே விநியோகஸ்தர் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அசத்தலான வீடியோ மூலம் தன்னுடைய அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். அதனால் லியோ திரைப்படம் வெளிநாட்டில் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் லியோ திரைப்படத்தின் முன் பதிவு முன்கூட்டியே திறக்கப்படுவதால் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் லியோ மிகப்பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இதற்கு முன்பு நடைபெற்ற விஜய் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை விட பல மடங்கு பிரம்மாண்டமாக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது இந்த ஆடியோ வெளியீட்டு விழா சென்னைக்கு வெளியே தான் நடக்க இருப்பதாக கூறப்பட்டது. இப்படி லியோ  திரைப்படத்தின் முன்பதிவு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இன்னும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேங்ஸ்டர் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் விளம்பரம் இதுவரை இல்லாத வகையில் செயல்படுத்த இருக்கிறார்கள் பட குழு.