இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதுவரை விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் படங்களை எடுத்து இருக்கிறார் ஆனால் அந்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களை என்பதால் தற்பொழுது முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். கடைசியாக எடுத்த “விக்ரம்” திரைப்படம்.
மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது. அதனை தொடர்ந்து இன்னொரு வெற்றி பாடத்தை கொடுக்க லோகேஷ் கனகராஜ் விஜய் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ படத்தை எடுத்து வருகிறார். படத்தின் முதல் கட்ட சூட்டிங் சைலன்டாக முடிந்தது.
இரண்டாவது கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் இரவு / பகல் பார்க்காமல் கடும் குளிரில் படகுழு வேலை பார்த்தது அங்கு படபிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் வெகுவிரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறதாம்.. இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார்..
அப்பொழுது லியோ திரைப்படம் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. விக்ரம் படத்தில் ஆரம்பிக்கலாமா என்ற வசனம் பெரிய அளவில் பேசப்பட்டதோ அதே போல லியோ திரைப்படத்தில் பிளடி ஸ்வீட் வசனமும் அடிக்கடி வந்து போகும் என கூறியுள்ளார்..
மேலும் பேசிய இயக்குனர் லோகேஷ் லியோ படத்தின் 60 நாட்கள் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது மீதியை 60 நாட்கள் படபிடிப்பு இருக்கிறது பக்கா ஆக்சன் படமாக லியோ திரைப்படம் உருவாக போகிறது என்று கூறியுள்ளார் விஷயத்தை கேள்விப்பட்ட தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் மேலும் இந்த லியோ அப்டேட்டை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வைரல் ஆக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.