லியோ படம் ஒண்ணுக்கும் பிரயோஜனம் இல்லை.. பொழுதுபோக்கிற்காக பாக்கலாம் – பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்

Leo
Leo

Leo : ஜெயிலர், ஜவான், மார்க் ஆண்டனி படத்தை தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கக் கூடிய திரைப்படம் விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் தான்.. மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் மிகப்பெரிய ஆக்சன் படமாக உருவாகி உள்ளது. வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது.

இப்பொழுது பல இடங்களில் லியோ  முன்பதிவு ஜோராக நடைபெற்று வருகிறது. ரிலீசுக்கு இன்னும் சில தினங்கள் இருப்பதால் அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு வந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவை பெரிய அளவில் நடத்த திட்டம் போட்டது சில காரணங்களால் அது ரத்தக்கின.

இதனால் சோகம் அடைந்த   ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக இன்று லியோ டிரைலரை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது இந்த நிலையில் லியோ படத்தில் நடித்துள்ள பாபு ஆண்டனி சமீபத்திய பேட்டி ஒன்றில் லியோ 2 உருவாகும் வகையில் தான் இயக்குனர் படத்தை எடுத்திருப்பதாக கூறி ரசிகர்களை இன்னும் சந்தோஷம் அடைய வைத்தார்.

மேலும் அவர் சொன்னது லியோ படம் ஜெயிலர் படத்தை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது ஏனென்றால் லியோ படத்தின் கதை அந்த அளவிற்கு உள்ளது என நம்பிக்கை தெரிவித்துள்ளார் இப்படி லியோ படத்திற்கு எல்லாமே பாசிட்டிவாக இருக்கின்றன இந்த நேரத்தில் வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் பேட்டி ஒன்றில் லியோ படம் குறித்து பேசியது வைரலாகி வருகிறது அவர் சொன்னது என்னவென்றால்..

மாபியா, கேங்ஸ்டர் என சமூகத்திற்கு முக்கியத்துவம் இல்லாத இந்த லியோ படத்தின் மீது தனக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்றும் ஒரு பொழுதுபோக்கிற்காக மட்டும் அந்த படத்தை பார்க்கலாம் என்றும் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஏதாவது சுவாரஸ்யமாக டிரைலர் வைத்திருப்பார்கள் என கூறியுள்ளார்.