Leo : “அனுராக் காஷ்யப் “என்று அழைக்கப்படும் “அனுராக் சிங் காஷ்யப் ” இயக்குனர், தயாரிப்பாளர் நடிகர் என பல திறமைகளை கொண்டவர். தமிழ் திரைப்படத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தமிழில் வெளியாகும் நல்ல படங்களுக்கு தனது பாராட்டுகளை தவறாமல் தெரிவிப்பவர். நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடித்த “இமைக்கா நொடிகள்” என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.
தற்போது அவர் மூன்று தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்றுதான் “லியோ” படம். இத் திரைப்படம் தமிழகத் திரைப்படத் துறையில் பணி புரியும் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியருமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர உள்ளது. லோகேஷ் கனகராஜ் அவர்கள் மாநகரம்,கைதி போன்ற திரைப்படங்களையும், விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ‘மாஸ்டர்’ என்ற திரைப்படத்தையும், அதன் பிறகு கமலை வைத்து ‘விக்ரம்’ என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
பல ஹிட்டான படங்களை இயக்கிய இவர் தற்போது இளைய தளபதி விஜய் வைத்து ‘லியோ’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் அனுராக் காஷ்யப் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அனுராக் காஷ்யப் இத்திரைப்படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை குறித்து சமீப காலத்தில் நடந்த ஒரு பேட்டியில் சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார்.
“இதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படத்தை பார்த்துவிட்டு நானும் அவருடைய யுனிவர்சில் இணைந்து கொள்ள விரும்புகிறேன் என்று சோசியல் மீடியாக்களில் ஒரு முறை நான் கூறியிருந்தேன்.
இன்று எனது விருப்பம் போல லோகேஷ் கனகராஜ் ஒரு முறை என்னை அழைத்து வாங்க சார்.. லியோ படத்தில் உங்களுக்காக ஸ்பெஷல்லாக ஒரு கதை எழுதியுள்ளேன் என்று எனக்கு லியோ படத்தில் நடிக்க வாய்ப்பை கொடுத்தார்” என்று கூறியுள்ளார்.