Leo : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளவர் தளபதி விஜய். பீஸ்ட், வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் உடன் கைகோர்த்து லியோ படத்தில் நடித்து உள்ளார். மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் படமாக உருவாகியுள்ளது படத்தில் விஜயுடன் சேர்ந்து அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத்..
மடோனா செபாஸ்டியன், திரிஷா, பிரியா ஆனந்த், பிக் பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வந்தனர் லியோ படத்தின் படப்பிடிப்பு சென்னை காஷ்மீர் என பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது அதனைத் தொடர்ந்து அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
நான் ரெடி பாடலை தொடர்ந்து சஞ்சய் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படக்குழு glimpse வீடியோவை வெளியிட்டு அசத்தியது. இதனால் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்க வைத்துள்ளது லியோ படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது.
அதே தேதியில் இரண்டு டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாகுவதால், லியோ படத்தின் வசூலுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. அக்டோபர் 19ஆம் தேதி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா நடித்துள்ள “பகவந்த் கேசரி” திரைப்படம் ரிலீஸ் ஆகிறது
அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி ரவிதேஜாவின் “நாகேஸ்வரராவ்” திரைப்படமும் வெளியாகிறது இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்த இரண்டு படங்கள் அதிக தியேட்டர்களை கைப்பற்றும் என்பதால் லியோ படத்திற்கு குறைந்த தியேட்டர் கிடைக்கும் இதனால் வசூல் பாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.