லியோ திரைப்படம் எத்தனை கோடியில் உருவானது தெரியுமா.?

leo budget details
leo budget details

leo movie budget details : தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா மிஸ்கின் சஞ்சய்தத் கௌதம் வாசுதேவ் மேனன் அர்ஜுன் சாண்டி மாஸ்டர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது அது மட்டும் இல்லாமல் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை கடந்த ட்ரெய்லர் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே விஜய் திரைப்படம் என்றாலே நல்ல பிசினஸ் இருக்கும் என கூறப்பட்ட வருகிறது.

அந்த வகையில் லியோ திரைப்படத்தின் பிசினஸ் எதிர்பார்க்காததை விட அதிகமாக இருக்கும் என பலரும் கூறி வந்த நிலையில். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய்யை வித்தியாசமாக காட்டியுள்ளார் லோகேஷ் அதனை ட்ரெய்லரில் பார்த்தாலே அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

இந்த நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்து வருகிறது உலக அளவில் லியோ திரைப்படம் 434 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ளதாக பலரும் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்று தெரியாமல் இருந்து வந்த நிலையில் இது குறித்து லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார் அப்பொழுது லியோ திரைப்படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 300 கோடி வரை இருக்கும் என தெரிவித்துள்ளார் அதனால் லியோ திரைப்படம் மிகப்பெரிய பொருட்ச அளவில் எடுக்கப்பட்டுள்ளதால் இந்த திரைப்படத்தின் வசூல் பல மடங்கு இருக்கும் என கூறப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் விஜய் கேரியரில் இதுதான் அதிக பட்ஜெட் உள்ள திரைப்படம் என கூறப்படுகிறது.