Leo morning show : தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் லியோ, இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், என மிகப் பெரிய நட்சத்திரபட்டாலமே நடித்துள்ளார்கள் இந்த திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.
மேலும் லியோ திரைப்படத்திற்கு அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் அதிகாலை காட்சி நாலு மணி மற்றும் 7 மணி காட்சிகள் திரையிட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்திலும் அதிகாலை காட்சி திரையிட அனுமதிக்க வேண்டுமென தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தார்கள் இந்த நிலையில் தமிழகத்தில் 5 காட்சிகள் திரையிட்டுக் கொள்ளலாம் என சமீபத்தில் ஒரு அரசாணை வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது வந்த புதிய அறிவிப்பின்படி லியோ திரைப்படம் 19 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முதல் காட்சியாக காலை 9 மணிக்கு மட்டுமே தொடங்க வேண்டும் எனவும் 19, 20, 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் 5 காட்சிகளை திரையில் திரையிட்டுக் கொள்ளலாம் எனவும் அதே நேரத்தில் கடைசி காட்சி ஒன்றரை மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் அதிகாலை காட்சி காலை 9 மணிக்கு ஆரம்பமாக வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் வெளியாகியுள்ளது இதனால் அதிகாலை நான்கு மணி மற்றும் 7 மணி காட்சிகள் லியோ திரைப்படத்திற்கு கிடைக்க வாய்ப்பு காம்மி என தகவல் வெளியானது.
விஜய் ரசிகர்கள் எப்படியாவது அதிகாலை காட்சி கிடைத்து விடும் என ஆசை ஆசையாய் இருந்தார்கள் ஆனால் அவர்களை நம்ப வைத்து முதுகில் குத்தியது போல் இப்படி ஒரு ஏமாற்ற செய்தி அவர்களுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டில் இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி ஆரம்பமாக இருப்பதால் தமிழகத்தில் 18ஆம் தேதி பிரிமியர் காட்சியை திரையிட வேண்டும் என வேண்டு கொள் வைத்துள்ளார்கள்.