தமிழ் சினிமாவில் இன்று வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் கடைசியாக நடித்த வாரிசு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க இயக்குனர் லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து தளபதி விஜய் லியோ..
திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், திரிஷா, ப்ரியா ஆனந்த், பிக் பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். லியோ படத்தின் முதல் கட்ட சென்னையில் சைலண்டாக முடிந்ததை..
அடுத்து இரண்டாவது கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிர் என்று கூட பார்க்காமல் இரண்டு மாதங்களாக அங்கு படப்பிடிப்பை நடத்தி வருகிறது. இதுவரை கெளதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின் போன்றவர்களின் படப்பிடிப்பு முடிந்ததை தவிர மற்றபடி அனைவரும் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர்.
வருகின்ற 25ஆம் தேதி உடன் காஷ்மீரில் படப்பிடிப்பு நிறைவுபெறும் என கூறப்படுகிறது. அடுத்ததாக சென்னையில் தான் ஷூட்டிங் நடைபெறும் என படக்குழு ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து விட்டது இதனால் ரசிகர்கள் செம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.. இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்களுக்கு இன்னொரு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
லியோ படக்குழு அதாவது காஷ்மீரில் எப்படி எல்லாம் சூட்டிங் எடுக்கப்பட்டது எப்படி எல்லாம் கஷ்டப்பட்டோம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது இதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு மெனக்கெட்டு இருக்கிறீர்களா என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இதோ அந்த அழகிய வீடியோவை நீங்களே பாருங்கள்.