Leo : காபி ஷாப்பில் நடக்கும் சண்டை சீனை லோகி எங்கிருந்து தூக்கி இருக்கிறார் பாருங்கள்.! கலாய்க்கும் ரசிகர்கள்

Leo
Leo

Leo : லோகேஷ் கனகராஜ் இதுவரை எடுத்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான் கடைசியாக கமலை வைத்து இவர் எடுத்த விக்ரம் படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய வெற்றி பெற்றது. உடனே விஜய் உடன் கூட்டணி அமைத்து லியோ படத்தை எடுத்தார். பல தடைகளை தாண்டி படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் எங்கும் வெளியானது.

படத்தில் விஜயுடன் இணைந்து அர்ஜு,ன் சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், ப்ரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர், த்ரிஷா என மிகப் பெரிய திரைப் பட்டாளமே நடித்திருந்தது படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் எமோஷனல் கலந்த படமாக இருந்ததால் படம் மக்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று..

இது 100% சதவீதம் லோகேஷ் படமே கிடையாது.! கதையில் குறுக்கிட்ட விஜய்.. தயாரிப்பாளர் சொன்ன ஷாக்கிங் தகவல்..

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இதுவரை மட்டுமே 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது. வருகின்ற நாட்கள் விடுமுறை நாள் என்பதால் வசூல் அள்ளும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் லியோ படத்தில் பார்த்திபன் (விஜய்) காபி ஷாப் ஒன்றை நடத்தி வருவார்.

அப்பொழுது சாண்டி மாஸ்டர், மிஷ்கின் கும்பல் அங்கு வந்து இருப்பவர்களை கொன்று விட்டு காசுகளை எடுத்துச் செல்ல முயற்சிப்பார்கள் விஜய் அவர்களுடன் சண்டை போட்டு துப்பாக்கியால் அனைவரையும் கொள்வார் இந்த சீன் தெலுங்கு படம் ஒன்றிலிருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

விக்ரம் படத்தை நான் காப்பி அடிக்கல.. லோகேஷ் கிட்ட கதை சொல்லிவிட்டேன் – இயக்குனர் நெல்சன் சொன்ன உண்மை

அதை உறுதிப்படுத்தும் வகையில் வீடியோவும் இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.  இதைப் பார்த்த ரசிகர்கள் காப்பி அடிப்பதில் அண்ணன் அட்லீயை  மிஞ்சிட்டியே லோக்கி என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.