Leo Poster : லியோ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடைசியாக கமலை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கொடுத்தார் இந்த நிலையில் மீண்டும் விஜயுடன் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளார் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியனார். இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் சஞ்சய்தத் அர்ஜுன் கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், பிரியா ஆனந்த், கதிர், சாண்டி மாஸ்டர் ,அர்ஜுன் பிக் பாஸ் ஜனனி, என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தின் மூலம் விஜயுடன் பல வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளார் திரிஷா. படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
அனிருத் இசையில் ஏற்கனவே முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது இந்த நிலையில் படத்தை வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி படக்குழு வெளியிட இருக்கிறது இந்த திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் லியோ திரைப்படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் லியோ திரைப்படத்திலிருந்து ஒரு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது அந்த போஸ்டரில் (KEEP CALM AND PREPARE FOR BATTLE) என்ற கேப்ஷன் பதிக்கப்பட்டுள்ளது அது மட்டுமில்லாமல் விஜய் வெறித்தனமாக கோபத்துடன் கத்திக்கு சாணை பிடித்து வருகிறார்.
இதில் கத்தியில் இருந்து தீப்பொறி பறக்கிறது இந்த போஸ்டரை பார்த்தால் சரியான ஆக்ஷன் காட்சி இருக்கிறது என தெரிகிறது இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.