Leo : விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியானது ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு படத்தை பார்த்து வருகின்றனர். லியோ படத்தின் கதை என்னவென்றால்.. தாஸ் குடும்பத்தில் லியோ தாஸ் ஒருவர் இருக்கிறார் அவரை சில காரணமாக கொன்று விடுகிறார்கள்.
பல வருடங்கள் கழித்து காஷ்மீர் பக்கத்தில் பார்த்திபன் என்ற நபர் பிரபலமடைகிறார். அவருடைய போட்டோ இந்தியா முழுவதும் இருக்கிறது இதை பார்த்த தாஸ் குடும்பம் அதிர்ச்சியாகிறது அப்படியே லியோ தாஸ் போலவே இருக்கிறான் என்ற சொல்லில் அவரை தேடி போகிறது.
அதன் பிறகும் நடக்கும் ஆக்சன், செண்டிமெண்ட் தான் படத்தின் கதை படம் சிறப்பாக இருப்பதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு படத்தை பார்த்து வருகின்றனர். அதன் காரணமாக வசூலிலும் சக்க போடு போட்டு வருகிறது மூன்று நாள் முடிவில் மட்டுமே லியோ 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது.
வருகின்ற நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் லியோ படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. லியோ திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது இருப்பினும் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
லியோ முதல் வார முடிவில் USA மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளிலும் 3.7 மில்லியன் டாலர் வரை வசூலித்து உள்ளது. ஆனால் ஜெயிலர் படம் முதல் வாரம் USA -வில் மட்டும் சுமார் 4 மில்லியன் வரை வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.