சுறா இரண்டாவது பாகம் தான் லியோ.. புயலைக் கிளப்பிய பிரபலம்

Vijay
Vijay

Vijay leo : ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது இதுவரை மட்டுமே 550 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது இதனால் ரஜினி தொடங்கி படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் ஆதரவாளரும், விமர்சகருமான “சத்யன்” விஜயின் லியோ படம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் அவர் சொன்னது.. விஜய் ரசிகர்கள் அஜித் ஃபேன்ஸ் மாதிரி கிடையாது ஒரு படம் பிளாப் ஆனால் கூட  அந்த இயக்குனரை வெளுத்து எடுத்து விடுவார்கள் அவர்களுக்கு அது இன்செக்யூரிட்டி தான்.

எப்பவுமே மேலே இருக்க வேண்டும் என நினைப்பார்கள் விஜய் ரசிகர்கள் நெல்சனை படுத்திய பாடு இந்தியாவில் எந்த நடிகர்களை இயக்கிய இயக்குனர்களுக்குமே நடந்திருக்காது அத்தனை அசிங்கப்படுத்தினார்கள். விஜய் தோத்துட்டா பதுங்கி விடுவார்கள் அவருடன் இருக்கவே மாட்டார்கள்.

அப்படிதான் தற்பொழுது லியோ படத்திலும் நடக்க இருக்கிறது இந்த படம் சுறா இரண்டாம் பாகம் போல் தான் அமையும் படம் ரிலீஸ் ஆகல அதுக்குள் 450 கோடி வியாபாரம் செய்து வைத்திருக்கின்றனர் அப்போ இந்த  800 கோடி வசூல் செஞ்சா தானே ஹிட் அடிக்கும் 600 கோடி வசூல் செய்தால் அது படம் பிளாப் தான்.?

மாஸ்டர் படத்துல விஜய் சேதுபதி விஜய் லெப்ட்டில் டீல் செய்வார் ஒரே வில்லனாக  தான் படம் ஹிட்டாச்சி ஆனால் இங்க மாட்டு சந்தை மாதிரி ஆளுங்க இறக்கி வச்சிருக்காங்க ஹரால்டு தாஸ் அந்த தாஸ் இந்த தாஸ் என ஏகப்பட்ட ஆட்களை போட்டு வைத்திருக்கிறார்கள் இது அடுத்த பிளாப்பாகவே மாறும் என குறிப்பிட்டுள்ளார்.