Leo : ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்நோக்கி இருக்கும் திரைப்படம் விஜய்யின் லியோ தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக வந்து இருக்கிறது.
படத்தில் தளபதி உடன் இணைந்து சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், பிரியா ஆனந்த், த்ரிஷா, பிக்பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். லியோ படத்தின் படிப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது.
லியோ படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என கூறப்பட்டது இந்த நிலையில் லியோ படத்தை எதிர்த்து கன்னடாவில் சிவராஜ்குமார் நடித்துள்ள கோஸ்ட் திரைப்படம் வெளியாகிறது. ஆந்திராவில் டாப் ஹீரோவாக வலம் வரும் பாலகிருஷ்ணா நடித்துள்ள பகவந்த் கேசரி திரைப்படம் வெளியாகிறது.
இதனால் லியோ படத்தின் வசூல் அங்கு பாதிக்கும் என பலரும் அடித்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் லியோ படத்தை எதிர்த்து தமிழிலும் ஒரு படம் ரிலீஸ் ஆகிறது. பல வருடங்களாக கிடப்பில் கிடந்த நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் லியோ படத்திற்கு தமிழ்நாட்டிலும் தியேட்டர்கள் குறைவதோடு வசூல் பாதிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை.. ஆனால் இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது