Leo : சினிமா உலகில் வெற்றி கண்ட நடிகர், நடிகைகளை தொடர்ந்து அவருடைய வாரிசுகளும் சினிமா உலகில் கால் தடம் பதிக்கின்றனர் அந்த வகையில் விஜயை தொடர்ந்து அவரது மகன் ஜேசன் சஞ்சய் முதலில் குறும்படங்களில் நடித்தும் இயக்கியும் வந்தார் என பேச்சுக்கள்..
அடிபட்டு வந்த நிலையில் திடீரென லைகா நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் பண்ண இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த நிலையில் சினிமா விமர்சகர் ஒருவர் பேட்டி ஒன்றில் ஜேசன் சஞ்சய் மற்றும் விஜய் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் படம் இயக்கப் போவது குறித்து அப்பா விஜய்க்கு தெரியாது என்றும், இதனால் விஜய் செம கடுப்பில் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார் மேலும் அப்பாவுடன் சமீப காலமாக மகன் சஞ்சய் பேசுவதே கிடையாது. ஏனென்றால் அம்மாவை விட்டு அப்பா பிரிந்து இருப்பது தான் இதற்கு காரணம் இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
லியோ திரைப்படம் 1000 கோடி வசூல் பண்ணும் 1500 கோடி வசூல் பண்ணும் என ரசிகர்கள் வேண்டுமானால் வடை சுடலாம் ஆனால் நிஜத்தில் நடிகர் விஜய் அதுக்கு வொர்த்தான ஆளு கிடையாது. ஷாருக்கான் மும்பையில் இருந்து சென்னை வந்து ஸ்டேஜில் ஆடி தமிழ் ரசிகர்களை சந்தோஷப்படுத்துகிறார் இப்படி ஒரு ஹீரோ..
இங்கே மற்ற மாநிலங்களுக்குச் சென்று ஆட்டம் போடுவார்களா நிகழ்ச்சி நடத்துவார்களா இங்கே நடக்கிற நிகழ்ச்சியிலேயே மற்ற நடிகர்கள் வந்துவிட்டார் யார் முதலில் பேசுவது என்ற பஞ்சாயத்திலேயே யாரையும் அழைக்காமல் தனித்தனியாக நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இதில் எங்கிருந்து 1000 கோடி வசூல் செய்யும் லியோ என பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசி உள்ளார். விஜயன் லியோ திரைப்படம் 500 அல்லது 600 கோடி அதிகபட்சமாக வசூல் செய்யும் என கூறியுள்ளார்.