விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்த நிலையில் தற்போது அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்திர்க்குதான் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது என்று கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்திலிருந்து பல தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டைட்டில் ப்ரோமோவை பட குழு வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்திற்கு லியோ என்ற டைட்டில் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வீடியோ திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், உள்ளிட்ட பல பிரபலங்கள் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.
காஷ்மீரில் தொடங்கப்பட்ட முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து அவ்வப்போது ஒரு சில புகைப்படங்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருக்கும் இரண்டு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் லியோ படத்தின் அப்டேட்டை இயக்குனர் ரத்தினகுமார் அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதாவது லியோ திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து இருக்கிறார்கள் அவர்கள் எதிர்பார்ப்பை விட இரண்டு மடங்காக இந்த படம் இருக்கும் என்று கூறியுள்ளார் அது மட்டுமல்லாமல் உங்களுடைய எதிர்பார்ப்பை கொஞ்சம் அதிகப்படுத்தி வையுங்கள் என்றும் கூறியிருக்கிறார்.
இதனால் லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது இரட்டிப்பாகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் எல்சியு-வில் இணையும் என்ற எதிர்பார்ப்பும் இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. இதனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தில் ஒரு மிகப்பெரிய சம்பவம் செய்ய காத்திருக்கிறார் என்றும் கூறி வருகின்றனர்.