அஜித் மாதிரி புருஷன் வேணும் ஒத்தக்காலில் நிற்கும் லியோ பிரபலம்.! அப்ப இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது.?

Ajith
Ajith

Trisha : இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க என்ன காரணம் என்பது குறித்து த்ரிஷா பேசி உள்ளார்.   தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் த்ரிஷா. இவர் அஜித், விஜய், ரஜினி, சூர்யா, விக்ரம் போன்ற பல்வேறு நடிகர்களுடன் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் த்ரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் பார்ட் 1 பார்ட் 2 பெரிய வெற்றி பெற்றது தொடர்ந்து கைவசம் லியோ படம் விடாமுயற்சி படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இதற்கெல்லாம் முன்பாக தி ரோடு திரைப்படம் நேற்று வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து அவர் பேசியுள்ளார். சினிமா எனக்குள் ஒரு அங்கமாக பார்க்கிறேன் நான் சாகுற வரை சினிமாவில் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் இது என்னுடைய வேலை நான் நாளைக்கே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தால் கூட சினிமாவை நான் விடுவதாக இல்லை.

800 படத்தின் திரைவிமர்சனம்.!

சினிமா என் கையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் சினிமாவை தவிர எனக்கு வேற எதுவும் தெரியாது நான் எப்பொழுது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அடிக்கடி கேட்கப்படுகிறது நான் அதற்கு என் மனதில் ஓத்த ஒருவரை நான் சந்திக்க வேண்டும். இதர வாழ்க்கையை நான் அவருடன் வாழ முடியும் என்று எனக்கு தோன்ற வேண்டும்.

விவாகரத்தில் நம்பிக்கையில்லை நான் கல்யாணம் செய்து கொண்டு அதை நோக்கி செல்வதற்கு விருப்பமும் இல்லை எனக்கு தெரிந்த பல நண்பர்கள் அவரது மன வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன என்னுடைய வாழ்க்கை அப்படி ஆகிவிடக்கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்.

நான் எனக்கான நபரை  தேடிக் கொண்டிருக்கிறேன் அப்படியான ஒன்று நடக்கவில்லை என்றாலும் அதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை அது ஒன்றும் தவறான விஷயம் கிடையாது திருமணம் என்பது இரண்டாவது விஷயம் முதலில் நான் வரை சந்திக்க வேண்டும் பழக வேண்டும். அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் ஒரு பக்கா ஜென்டில்மேன் அவர் எனக்கு என்ன சாப்பாடு வேண்டும் என்று கேட்பார்.

நான் யார் தெரியுமா.! என்ன அஜித்துடன் கட்டாயப்படுத்தி நடிக்க வச்சாங்க.. பரபரப்பு ஏற்படுத்திய பிரபல நடிகை.!

Trisha
Trisha

அப்படி கேட்பவரை யாருக்குத்தான் பிடிக்காது நானும் அவரும் நிறைய பேசியிருக்கிறோம். அதில் சினிமா சார்ந்த விஷயங்கள் கூட இல்லை அவர் பலதரப்பட்ட விஷயங்கள் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் நல்ல கணவரும், அப்பாவுமாக இருக்கிறார் அவரை போன்ற நபரை எந்த ஒரு பெண்ணும் கணவனாக பெற வேண்டும் என்று விரும்புவாள் என பேசி உள்ளார்.