ரூ.500 கோடிக்கு பொன்னியின் செல்வன் வைத்த புள்ளி.. லியோ, இந்தியன் 2 ரூ.1000 கோடியை நெருங்குமா.?

leo
leo

Ponniyin selvan Movie: தெலுங்கு திரை உலகில் இருந்து தமிழில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி தெலுங்கு திரைப்படங்கள் பல கோடிகள் வசூல் செய்து வரும் நிலையில் ஆனால் தமிழ் திரைப்படங்களால் 500 கோடியை தாண்டுவதே சவாலாக உள்ளது.

எனவே தற்பொழுதுதான் தமிழ் படங்களை 500 கோடியை தொட்டிருக்கும் நிலையில் விரைவில் 1000 கோடி வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தெலுங்கு படங்களான பாகுபலி, பாகுபலி 2 மற்றும் ஆர்ஆர்ஆர், கன்னட திரைவுலகில் காந்தாரா, பாலிவுட்டில் பதான் ஆகிய திரைப்படங்கள் 500 கோடி ரூபாய் முதல் 1000 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

ஆனால் இந்த சாதனையை தமிழ் திரைப்படங்கள் செய்ய முடியாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடி முதன் முதலாக வசூல் செய்வது. எனவே இதனை அடுத்து மற்ற முன்னணி நடிகர்களும் நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர்.

அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் ஜெயிலர் படம் 500 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. எனவே இனிவரும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி முக்கியமாக தளபதி விஜய் நடித்து வரும் லியோ படம் 500 முதல் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதேபோல் சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர், விக்ரமின் தங்கலான், சூர்யாவின் கங்குவா ஆகிய திரைப்படங்கள் பிரம்மாண்டமாக பல கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் நிலையில் 500 கோடி ரூபாய் வசூலை நெருங்க வாய்ப்பிருக்கிறது.

இதனை அடுத்து சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் ரூபாய் 1000 கொடியை நெருங்கும் என கூறப்படுகிறது. அப்படி பொன்னியின் செல்வன் 500 கோடி ரூபாய்க்கு புள்ளி வைத்த நிலையில் இதனை வைத்து சமீப காலங்களாக முன்னணி நடிகர்களும் நம்பிக்கை உடன் இருந்து வருகிறார்கள்.