லியோ படத்தில் VFX வைத்து உருவாக்கிய கழுதைப்புலி கதாபாத்திரத்தில் நடித்தவர் இவரா.? புகைப்படம் உள்ளே

Leo Hyena vfx :  தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. மேலும் லியோ திரைப்படத்தின் பிரீ புக்கிங் கடந்த சில நாட்களாகவே மிகவும் பரபரப்பாக புக் ஆகிக் கொண்டிருக்கிறது.

ப்ரீ புக்கிங்கிள் லியோ நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது இந்த நிலையில் லியோ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர், மிஸ்கின் மன்சூர் அலிகான், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள் இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார்.

லியோ திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவானது இந்த நிலையில் இதில் விஜயின் சம்பளம் 100 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது அதைப்போல் த்ரிஷாவிற்கு ஐந்து கோடி சம்பளம் என தகவல் வெளியானது. பாடத்தில் கேமியா ரோலில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் என தகவல் கிடைத்துள்ளது இது குறித்து லோகேஷ் கனகராஜ் இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் அமைதியாக இருந்து வருகிறார்.

அதை சொன்னால் படத்தின் சுவாரசியம் குறைந்து விடும் அதனால் கண்டிப்பாக சொல்ல முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார். ப்ரீ புக்கிங்கில் லியோ திரைப்படம் 60 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது சமீபத்தில் வந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது, VFX காட்சிகள் மிகவும் தரமானதாக இருந்தது அனைவருக்கும் தெரியும் அதிலும் அந்த Hyena காட்சி மிகவும் தத்ரூபமாக இருந்தது. Hyena வரும் காட்சிகள் மிகவும் மிரட்டலாக இருக்கும் என பட குழுவினர் பலரும் கூறியுள்ளார்கள் இந்த நிலையில் என்னதான் VFX காட்சியில் Hyena எடுக்கப்பட்டிருந்தாலும் அதற்கு ஒரு நபர் நடித்துதான் ஆக வேண்டும்.

அப்படி VFX மூலம் தத்துரூபமாக கொண்டுவரப்பட்ட Hyena வாக நடித்தவர் யார் என்று தற்போது தெரியவந்துள்ளது அவரின் பெயர் கலை மணி இவர்தான் VFX ல் வரும் Hyena கதாபாத்திரத்தில் கேமரா முன் நடித்தவர் இதோ அவரின் புகைப்படம்.

leo Hyena kalaimani
Exit mobile version