Leo Movie : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து இந்திய அளவில் பிரபலமடைந்துள்ளார் தற்பொழுது நடிகர் விஜயை வைத்து லியோ திரைப்படத்தை எடுத்துள்ளார் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது.
படம் வெளிவர இன்னும் சில தினங்களில் இருப்பதால் ப்ரமோஷன் வேலைகள் தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது. இயக்குனர் ரத்தினகுமார் மற்றும் லோகேஷ் போன்றவர்கள் தொடர்ந்து லியோ படம் குறித்தும், விஜய் குறித்தும் பேசி வருகின்றனர் இதுவே இந்த படத்திற்கான பிரமோஷன்னாக பார்க்கப்படுகிறது.
அஜித்துக்கு அப்படி ஒரு மனசு.. அமர்க்களம் படத்தில் நேரில் பார்த்தேன் – நடிகை அம்பிகா சொன்ன சீக்ரெட்
இப்படி இருக்கின்ற நிலையில் லியோ படம் ரசிகர்களுக்கு அலுத்து போக கூட வாய்ப்பு இருக்கிறது என வலைப்பேச்சு அந்தணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து போதைப் பொருள் சம்பந்தப்பட்ட படமாகவே எடுத்து வருகிறார்.
ஒரு தடவை, இரண்டு தடவை பார்த்தால் கூட ஓகே ஆனால் இதே கான்செப்டில் அடுத்தடுத்து வெளி வந்தால் ரசிகர்களுக்கு அலுத்து போக கூட வாய்ப்பு இருக்கிறது . அப்படி லியோ படமும் அலுத்து போறதுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் உலகில் பல பிரச்சனை நடக்கிறது.
தண்ணி கொடுக்காம இருக்குறது போராட்டமா.? கிழித்து தொங்க விட்ட கமல்.! வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ
அதில் ஏதாவது ஒன்றை எடுத்து கூறினால் அது இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இது போன்ற புதுமையானவை லோகேஷ் போன்ற முன்னணி இயக்குனர்கள் செய்ய வேண்டும் என வலைப்பேச்சு அந்த நான் கூறியுள்ளார் இதற்கு பலரும் எதிர்ப்பும், ஆதரவும் கொடுத்து வருகின்றனர்.