பாஸ் இது ரெக்கார்டு இல்ல வரலாறு.! முதல் நாள் பாக்ஸ் ஆபீஸில் லியோ மிரட்டல் சாதனை.. ரிலீசுக்கு முன்பே ஆட்டத்தை ஆரம்பிச்சிடாங்களே

leo box office first day record
leo box office first day record

Leo 1 day collection in uk : தளபதி விஜய் தற்பொழுது மக்களின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வருகிறார் இவர் தற்பொழுது பக்காவான ஆக்சன் திரைப்படமான லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் இயக்கியுள்ளார். படத்தில் நடிகை திரிஷா கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜயுடன் இணைந்துள்ளார்.

விஜய் மற்றும் திரிஷா ரசிகர்களின் ஃபேவரட் ஜோடி இவர்கள் இணைந்து நடித்த கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ,ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு இரண்டு மடங்காக சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

பாஸ் இது ரெக்கார்டு இல்ல வரலாறு.! முதல் நாள் பாக்ஸ் ஆபீஸில் லியோ மிரட்டல் சாதனை.. ரிலீசுக்கு முன்பே ஆட்டத்தை ஆரம்பிச்சிடாங்களே

லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கியுள்ளார். இதற்கு முன்பு விஜயின் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அது மட்டும் இல்லாமல் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை கொடுத்து மாபெரும் வெற்றியை நிலை நாட்டினார். லியோ திரைப்படத்தில் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், அனுராக், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், பாபு ஆண்டனி, மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மரியான், அபிராமி வெங்கடாசலம், ஜாபர் சாதிக், மாயகிருஷ்ணன், சாந்தி மாயாதேவி ராமகிருஷ்ணன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

இந்திய சினிமாவில் இதுவரை யாரும் பார்த்திராத அளவிற்கு ஒரு மிரட்டலானா ஆக்சன் காட்சியை cg உதவியுடன் அட்டகாசமாக கழுதை புலியுடன் எடுத்துள்ளார்கள். அதேபோல் விறுவிறுப்பான கார் சேஸிங் காட்சிகளும் இந்த திரைப்படத்தில் இருக்கிறது. லியோ திரைப்படத்திற்கு அன்பறிவு அதிரடி ஆக்சன் காட்சிகளை உருவாக்கியுள்ளார்.

படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் இப்படி இந்த திரைப்படத்தின் பல சிறப்பம்சங்கள் இருந்து வருகின்றன அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதால் முன்பதிவுகள் கிட்டத்தட்ட தொடங்கிவிட்டன இந்த நிலையில் யூகேவில் ரிலீசுக்கு ஆறு வாரங்களுக்கு முன்பே லியோ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டது இதுவரை 50,000 டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் லியோ திரைப்படத்திற்கு இன்னும் ஐந்து நாட்கள் இருக்கும் சூழ்நிலையில் முன்பதிவிலேயே முதல் நாள் பாக்ஸ் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாக அனைத்து ரெக்கார்டுகளையும் முறியடித்து ஆல் டைம் ரெகார்ட் செய்து சாதனை படைத்துள்ளது.

வேட்டையை ஆரம்பித்த விஜய்.! வர்றது எக்ஸ்பிரஸ் டா.. குறுக்க யாரும் வந்துடாதீங்க அடிச்சு தூக்கிடுவோம்..

இந்த மிரட்டலான சாதனையை அதிகாரப்பூர்வமாக யூகேவில் லியோ திரைப்படத்தை வெளியிடும் அகிம்சா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.