கேரளாவில் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்ட லியோ படம்.? ரஜினியின் 2.0 சாதனை முறியடிப்பு

leo
leo

வாரிசு படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் உடன் இணைந்து “லியோ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த படத்தில் டாப் நடிகர்கள் நடிக்கின்றனர்.

விஜய் உடன் கைகோர்த்து அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத்,  மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், திரிஷா, பிக்பாஸ் ஜனனி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். முதல் கட்ட சூட்டிங் சென்னையில் எடுக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து  இரண்டாவது கட்ட ஷூட்டிங் காஷ்மீரில்  கடும் குளிர் என்று கூட பார்க்காமல்..

இரண்டு மாதங்களுக்கு மேலாக எடுக்கப்பட்டு முடிவடைந்த நிலையில் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு  வருகிறது. ஹைதராபாத்தில் கடைசி ஷூட்டிங்  நடைபெறும் என சொல்லப்படுகிறது. லியோ படம் ஆக்சன் படம் என்று கூறப்பட்டாலும்  இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்டண்ட் காட்சிகள் ஒவ்வொன்றும் இரத்தம் தெறிக்கு வகையில் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால்  லியோ திரைப்படம் தியேட்டரில் மக்களை அலறவிடும் என கூறுகின்றனர்.

இந்த நிலையில் லியோ திரைப்படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு உரிமம் மட்டுமே 30 கோடிக்கு மேல் விற்கப்பட்ட நிலையில் மற்ற இடங்களிலும் நல்ல பிசினஸ் என கூறப்படுகிறது. குறிப்பாக கேரளா உரிமம் 16 கோடிக்கு விட்டுள்ளதாக கூறப்படுகிறது இதன் மூலம் ரஜினியின் 2.0 பிசினஸ் வியாபாரத்த்தை லியோ கேரளாவில் முறையடித்துள்ளது.  ஒட்டுமொத்தமாக பிரீ பிஸ்னஸின் மூலம் லியோ 350 ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தயாரிப்பாளர் செம சந்தோஷத்தில் இருக்கிறார் ஏனென்றால் இப்பவே லாபத்தை கொடுத்துள்ளதாக கூறுகின்றன . படம் வெளிவந்து மிகப்பெரிய ஒரு வெற்றியை லியோ படம் பதிவு செய்யும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.