லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தோல்வியை சந்திக்காத இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளவர். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது அதிலும் குறிப்பாக கமலை வைத்து லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூலை அள்ளி எதிர்ப்பாராத அளவு ஹிட் அடித்தது.
விக்ரம் படம் அவரது மார்க்கெட்டை மலமலவென உயர்த்தியது. இந்த நிலையில் தற்போது லோகேஷ் விஜயுடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து “லியோ” என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுவும் கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் லியோ படத்தில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஸ்கின் போன்ற பல முன்னணி நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது.
அதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு தற்போதே விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது லியோ படத்தின் சூட்டிங் காஷ்மீரில் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்படி சினிமாவில் வெற்றி இயக்குனராக ஓடிவரும் லோகேஷ் நிஜ வாழ்க்கையில் திருமணம் ஆகி குழந்தைக்கு தகப்பனார் என்பதை மீடியா உலகிற்கே தெரியாமல் வைத்திருந்தார்.
இப்படி இருக்க சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கூறியது, எனக்கு இரண்டாவது படம் கிடைக்கும் வரை நீ வேலைக்கு போ, அதுவரைக்கும் எனக்கு பெரிய வருவாய் இருக்காது என அவரது மனைவியிடம் கூறியுள்ளாராம்.. லோகேஷ் மனைவியும் குழந்தை ஏழு மாதம் இருக்கும் போதே வங்கி ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இரண்டரை வருடம் வேலைக்கு சென்றார் பின்பு முதல் படம் முடித்து இரண்டாவது படம் கையெழுத்திட்டதும் லோகேஷ் அவரது மனைவியை ஒரே வாரத்திலேயே வேலையை விட செய்துள்ளாராம். லோகேஷ் கூறிய இந்த தகவல் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி உள்ளது.