Leo Box Office day 5 : லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பொதுவாக கமலஹாசனின் விக்ரம் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் தமிழ் சினிமாவின் வளர்ச்சியை மார்க்கெட்டில் உயர்த்தியது அதனை தொடர்ந்து ஜெயிலர் மற்றும் லியோ திரைப்படமும் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது.
டைட்டானிக் பட ஹீரோவான பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கிங் மேக்கர் மார்ட்டின் ஸ்கார்சஸி இயக்கிய கில்லர் ஆப் த ஃப்ளவர் மூன் என்ற திரைப்படத்தின் வசூலையே லியோ திரைப்படம் முறியடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் லியோ திரைப்படம் குறித்து பெருமையாக எழுதியுள்ளார்கள்.
அதேபோல் தமிழகத்தில் மட்டும் லியோ திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டிய நிலையில் இந்திய முழுவதும் 200 கோடி வசூலை வெறும் ஐந்து நாட்களிலேயே தாண்டி உள்ளது இந்த திரைப்படத்தில் ஆக்சன் காட்சிகள் மிரட்டலாக இருந்ததால் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் ஹைனா சீன் குடும்பத்துக்காக போராடும் நாயகன் என வித்தியாசமான கதைகளத்தில் லியோ திரைப்படம் ஆயுத பூஜை விஜயதசமி பண்டிகை நாட்களில் சாக்கை போடு போட்டு வருகிறது.
முதல் நான்கு நாட்களில் லியோ திரைப்படம் 405 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் ஐந்தாவது நாளான நேற்று 70 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஒட்டுமொத்தமாக லியோ திரைப்படம் 475 கோடி ரூபாய் வரை ஐந்து நாளில் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இப்படியே வசூல் வேட்டை நடத்தினால் ஜெயிலர் திரைப்படத்தின் வாழ்நாள் வசூலை லியோ திரைப்படம் முறியடிக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.
தயாரிப்பு நிறுவனம் முதல் நாள் வசூலை அறிவித்ததோடு சரி அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறார்கள் விரைவில் முழு வசூல் நிலவரத்தை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.