Leo day 3 box office collection : தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்து வருகிறது.
சமீப காலமாக பல திரைப்படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைக்கவில்லை என்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகிறது இந்த நிலையில் அக்டோபர் 19 ஆம் தேதி ரசிகர்கள் திரையரங்கிற்கு படையெடுக்க ஆரம்பித்தார்கள் இன்னும் ஒரு வாரத்திற்கு ஹவுஸ் ஃபுல் நிலைமை நீடித்து வரும் என பலரும் கூறி வருகிறார்கள்.
அதேபோல் லியோ திரைப்படம் வெளியவதற்கு முன்பே இசை வெளியீட்டு விழா, ட்ரைலரில் இடம் பெற்ற கெட்ட வார்த்தை என பல சர்ச்சைகளை சந்தித்து வந்தது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் கிடைக்கவில்லை இப்படி பல சர்ச்சைகள் இருந்ததால் படத்திற்கு நல்ல ப்ரமோஷன் கிடைத்தது.
அப்படி இருக்கும் நிலையில் லியோ திரைப்படம் முதல் நாள் 140 கோடி வசூல் வரும் என கணிக்கப்பட்டிருந்தது ஆனால் படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் முதல் நாள் வசூல் 148.5 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதுமட்டுமில்லாமல் மாநிலம் வாரியாக படத்தின் வசூலை அறிவித்தார்கள். இதன் நிலையில் இரண்டாவது நாளில் வசூல் கொஞ்சம் சரிய தொடங்கியது இரண்டாவது நாளில் 65 கோடியை வசூலித்திருந்தது லியோ திரைப்படம்.
வசூல் குறைவதற்கு காரணம் எதிர்மறையான விமர்சனங்கள் என கூறப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் மூன்றாவது நாள் வசூல் கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மூன்றாவது நாள் 21 கோடி ரூபாய் வரை லியோ திரைப்படம் வசூலித்துள்ளது அதேபோல் கேரளா மற்றும் கர்நாடகாவில் ஆறு கோடியும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 8 கோடியும் நார்த் இந்தியாவில் 4.50 கோடியும் வசூல் செய்துள்ளது இந்திய அளவில் மூன்றாவது நாளில் 45 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அதேபோல் உலக அளவில் 3 நாள் முடிவில் 305 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இன்னும் தொடர் விடுமுறை என்பதால் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இலியோ திரைப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய்தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மடோனா செபஸ்டியன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.