leo day 2 box office collection : விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்தது லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வியாழக்கிழமை 800 திரையரங்கிற்கு மேல் 1176 காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.
அதே போல் விஜய் ரசிகர்கள் தீபாவளி தினத்தை கொண்டாடுகிறார்கலோ இல்லையோ விஜய் திரைப்படத்தை கோளகாலமாக கொண்டாடுவார்கள் அந்த வகையில் லியோ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்தார்கள் ஆனால் லியோ திரைப்படத்திற்கு 4 மணி காட்சிகள் மட்டும் கிடைக்கவில்லை ஆனாலும் படத்தை போட்டி போட்டுக் கொண்டு பார்த்து வருகிறார்கள்.
முதன் முதலாக லியோ வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்த நிறுவனம்.! கொளுத்துங்கடா வெடிய
லியோ திரைப்படம் வெளியாகி முதல் நாளில் தமிழகத்தில் 35 கோடியும் கேரளாவில் 12.50 கோடியும் வசூல் செய்ததாக தகவல் வெளியான நிலையில் படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மாலை முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள் அதாவது உலக அளவில் 148 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவலை வெளியிட்டார்கள்.
இந்த நிலையில் இரண்டாவது நாள் லியோ திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள் அந்த வகையில் இரண்டாவது நாளில் லியோ திரைப்படம் தமிழகத்தில் 48.96 கோடியும், தெலுங்கில் 12.9 கோடியும், ஹிந்தியில் 2.8 கோடியும், கன்னடத்தில் 14 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ஆக மொத்தத்தில் இந்திய அளவில் 36 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.
உலக அளவில் இரண்டாவது நாளில் 100.80 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. அதனால் 2 நாளில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது லியோ திரைப்படம். மேலும் இன்னும் ஒரு வாரத்திற்கு ஹவுஸ்ஃபுல் என்ற நிலைமை நீடித்து வருவதால் இதன் வசூல் அப்படியே இரண்டு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் லியோ திரைப்படத்தில் த்ரிஷா, சஞ்சய், சாண்டி மாஸ்டர்ஸ், அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.