leo day 1 collection : முதல் நாள் வசூலில் ரெக்கார்ட் பிரேக் செய்த லியோ.! மொத்தம் எத்தனை கோடி தெரியுமா.

leo day 1 collection
leo day 1 collection

leo day 1 collection : மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகிய திரைப்படம் தான் லியோ இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது இந்த நிலையில் நேற்று அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் இல்லியோ திரைப்படம் வெளியாக்கியது.

படத்தில் திரிஷா சஞ்சய் தத்து அர்ஜுன் மிஸ்கின் சாண்டி மாஸ்டர் கௌதம் பிரியா ஆனந்த் நமக்கு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.

படத்தின் கதை அர்ஜுன் மற்றும் சஞ்சய்தத் இருவரும் அண்ணன் தம்பிகள் போலவும் சஞ்சய்தத் அவர்களின் மகன் தான் லியோ ஆனால் ஒரு சூழ்நிலையில் தன்னுடைய மகன் அல்லது மகளை யாரையாவது கொன்றாக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார் சஞ்சயத்தை அதனால் விஜய்யின் தங்கையை கொன்றுவிடுகிறார்.

இதனால் லியோ என்ற விஜயையும் சுட்டுவிடுகிறார்கள் பிறகு இமாச்சலப் பிரதேசத்தில் விஜய் பார்த்திபனாக வாழ்ந்து வருகிறார். ஒரு காலகட்டத்தில் லியோ உயிரோடு இருப்பது தெரிந்ததால் அவரை கொல்ல துடிக்கிறது ஹரால்டு அர்ஜுன் அதிலிருந்து எப்படி விஜய் தப்பிக்கிறார் கடைசியாக இவர் தான் லியோ என்று தெரிந்ததா என்பதுதான் படத்தின் கதை.

இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது இந்த நிலையில் முதல் நாள் வசூல் எவ்வளவு என தகவல் கிடைத்துள்ளது இன்னும் ஆறு நாட்கள் விடுமுறை நாள் என்பதால் லியோ திரைப்படத்திற்கு மிகப்பெரிய வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் முதல் நாளில் வசூலில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது உலகம் முழுவதும் லியோனி திரைப்படம் 140 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளன.

அதேபோல் தமிழ்நாட்டில் முப்பது முதல் 35 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது ஏற்கனவே 40 கோடி வசூல் செய்யும் என கணிக்கப்பட்டிருந்தது எந்த நிலையில் கேரளாவில் முதல் நாளில் 11 கோடியும் கர்நாடகாவில் 14 கோடியும் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் 15 கோடியும் மற்ற மாநிலங்களில் ஐந்து முதல் 8 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் லியோ திரைப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் 60 முதல் 66 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் இருக்கும் என கூறப்படுகிறது மேலும் உலகம் முழுவதும் 140 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது அது மட்டும் இல்லாமல் இது ரெக்கார்ட் பிரேக் எனவும் கூறுகிறார்கள் ஆனால் இதுவரை பட குழு எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.