லியோ படத்தின் வசூலுக்கு ஆப்பு.! விஜயுடன் மோதும் சூப்பர் ஸ்டார் படம்

vijay
vijay

Vijay : தளபதி விஜய் நடிக்கும் படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக மாறுகின்றன  அதற்குக் காரணம் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதை, அவருடைய நடிப்பு என சொன்னாலும் மறுபக்கம் தமிழையும் தாண்டி பல்வேறு இடங்களில் விஜய்க்கு ரசிகர்கள் இருப்பதால் அவருடைய படங்கள் மாபெரும் வெற்றியை காண்கின்றனர்.

அதற்கு ஒரு உதாரணம் கடைசியாக நடித்த வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்த பொழுதிலும் 300 கோடி வசூல் அள்ளி சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார் படம் மிகப்பெரிய ஒரு ஆக்ஷன் பாக் திரைப்படமாக உருவாகியுள்ளது.

படத்தில் விஜய் உடன் இணைந்து மிஷ்கின், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பல நட்சத்திர பட்டாள்கள் நடித்துள்ளனர். இதனால் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த எதிர்பார்ப்பை இன்னும் குறைவிடாமல் இருக்க அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளிவருகின்றன கடைசியாக வெளிவந்த “நான் ரெடி” பாடல் பெரிய அளவில் ட்ரெண்டாகியது.

லியோ படம் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பான் இந்திய திரைப்படமாக  வெளியாக இருக்கிறது இதனால் லியோ திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் லியோ படத்தை எதிர்த்து ஒரு சூப்பர் ஸ்டாரின் படமும் வெளியாக இருக்கிறது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா நடித்துள்ள “பகவந்த் கேசரி” திரைப்படம் வெளியாக உள்ளது. தெலுங்கில் மிகப்பெரிய மார்க்கெட்டை வைத்திருக்கும் இவருக்கு அதை தாண்டி தமிழ், கர்நாடகா மற்றும் பல இடங்களில் இருப்பதால் இரண்டு படங்களும் பெரிய அளவில் மோதும்.. இதனால் லியோ படத்தின் வசூல் பாதிப்பு உறுதி என பலரும் அடித்து கூறுகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..