Leo censor : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, மிஷ்கின், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன்,சஞ்சய் தத் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் தான் லியோ இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
மேலும் படத்திலிருந்து சமீபத்தில் வெளியான பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது அது மட்டும் இல்லாமல் இந்த பாடல் தன்னை எதிர்ப்பவர்களுக்கு ஒரு பாடமாய் அமைவது போல் பாடல் இருந்தது மேலும் லியோ திரைப்படத்தின் டிரைலரை வருகின்ற ஐந்தாம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் தனஞ்ழியன் பிரபல youtube இணையதளத்திற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் லியோ பற்றிய தகவலையும் கூறியுள்ளார் அவர் கூறியதாவது லியோ திரைப்படத்திற்கு என்ன சர்டிபிகேட் கிடைக்கும் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சென்சார் குழு அவர்கள் வேலைகளில் மிகவும் ஈடுபாடுடன் இருக்கிறார்கள் அதனால் எதை நீக்க வேண்டும் எதை நீக்க கூடாது என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார்கள்.
அதற்கு தனஞ்செழியன் என்னுடைய ரத்தம் திரைப்படத்திற்கு u/A சான்றிதழ் தான் கிடைத்தது. அதில் சில வன்முறை காட்சிகள் இருந்தது அது மட்டும் இல்லாமல் ரத்தம் வருவது போல் காட்சிகளும் அமைந்திருந்தது, அதனால் படத்தை பார்த்த சென்சார் குழு சில இடங்களில் மியூட் செய்ய சொன்னார்கள் அதனால் U/A கொடுத்திருந்தார்கள் எனக்கூறிய தனஞ்செழியன் லோகேஷ் கனகராஜ் ஒரு நல்ல இயக்குனர் அவருக்கு எதை காட்ட வேண்டும் எதை மக்களுக்கு காட்டக்கூடாது என்பது நன்கு தெரியும்.
அதனால் கண்டிப்பாக லியோ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் தான் கிடைக்கும் என தயாரிப்பாளர் தனஞ்ழியன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.