Leo : லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவானது. பல தடைகளை தாண்டி அக்டோபர் 19ஆம் தேதி படம் வெளியானது. படத்தில் விஜயுடன் இணைந்து அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர்..
த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர், பிக்பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படத்தின் கதை என்னவென்றால்.. மிகப்பெரிய போதை பொருள் கும்பலான தாஸ் குடும்பம் தன்னுடைய சொந்த மகனான லியோ தாஸ் என்பவரை கொன்று இருக்கும்.. காஷ்மீர் பக்கத்தில் பார்த்திபன் என்பவர் வாழ்ந்து வருகிறார்.
ஒரு சம்பவத்தின் மூலம் பிரபலமடைகிறார் அதன் பின்னர் அவருடைய புகைப்படம் இந்தியா முழுவதும் பரவுகிறது அப்படி தாஸ் குடும்பம் பார்த்திபன் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி ஆகின்றனர் காரணம் லியோ தாஸ்சும், பார்த்திப்பனும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருகின்றனர். ஆண்டனி தாஸ் ஆட்களுடன் பார்த்திபனை பார்க்கபோகிறார். அது நடப்பது தான் படத்தின் கதை..
படம் எமோஷனல் ஆக்சன் என இருந்தாலும் இந்த கதை ஏற்கனவே பார்த்த கதை என்பதால் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. லியோ முதல் இரண்டு நாளில் வசூலில் எந்த குறையுமே வைக்கவில்லை முதல் நாளில் 148 கோடிக்கு மேல் வசூல்செய்திருந்தன.
இரண்டு நாள் முடிவில் லியோ திரைப்படம் 210 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது இதன் மூலம் பல சாதனைகளை முறியடித்து ஓடிக்கொண்டிருக்கிறது அந்த வகையில் அஜித்தின் துணிவு படத்தின் மொத்த வசூலையும் லியோ இரண்டு நாளில் லியோ முறியடித்து உள்ளது என சொல்லபடுகிறது.