எதிர்ப்பு எங்க இருக்குதோ அங்க சிக்சர் அடிச்சுட்டு செண்டர்ல்ல சேரை போட்டு உட்கார்றதுதான் நம்ம பழக்கமே.. லியோ வசூல் அதிகாரபூர்வ அறிவிப்பு..

leo box office in world wide
leo box office in world wide

Leo box office world wide 12 days : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிய திரைப்படம் leo இந்த திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது. படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரித்திருந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன், சஞ்சய், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான்,மிஸ்கின்,  கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், சஞ்சய் தத் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.

மேலும் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் கலவையான விமர்சனங்களையும் சந்தித்தது என்னதான் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் எந்த ஒரு சரிவியும் சந்திக்காமல் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது பல திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கான டிக்கெட் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டது.

Leo : வெற்றி விழாவுக்கு போறீங்களா.? இத மறக்காம எடுத்துட்டு போயிடுங்க..

இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் சாதனையை வெளியே சொல்லும் பொழுது இது தவறான சாதனை வேண்டுமென்றே அதிகமாக கூறுகிறார்கள் என பலரும் தெரிவித்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது என்ன வசூல் வந்ததோ அதைத்தான் கூறுகிறோம் என கூறி இருந்தார்.

ஆனாலும் திரையரங்க உரிமையாளர்கள் சிலரும் லியோ திரைப்படம் அந்த அளவு வசூலை கொடுக்கவில்லை என கூறியிருந்தார்கள் இந்த நிலையில் லியோ திரைப்படம் முதல் வாரத்தில் 461 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

தீபாவளி ரேசில் இறங்கிய மூன்று டாப் ஹீரோக்களின் படங்கள்.! வெற்றி பெறுமா கார்த்தியின் ஜப்பான்..

இந்த நிலையில் லியோ திரைப்படம் 12 நாட்களில் உலகம் முழுவதும் 540 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.