Leo box office : தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் லியோ இந்த திரைப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், அர்ஜூன், மிஷ்கின் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் சாண்டி மாஸ்டர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.
படத்தில் விஜய் நடிப்பு மிகவும் பிரமாண்டமாக இருந்தது என பலரும் கூறிய நிலையில் படத்திற்கு சில கலவையான விமர்சனங்களும் கிடைத்து வந்தது. மேலும் படம் வெளியாகி முதல் நாளே நல்ல வசூல் வேட்டை நடத்தியது இந்த நிலையில் 5 நாட்கள் முடிவில் லியோ 400 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.
வார இறுதியில் சூடுபிடிக்க தொடங்கிய லியோ வசூல்.! 500 கோடியை கடந்ததால் விஜய் ரசிகர்கள் உற்சாகம்..
அதனால் லியோ திரைப்படம் தமிழ் சினிமாவில் நல்ல வசூல் வேட்டை நடத்தி புதிய சாதனை படைக்கும் என பலரும் கூறி வந்தார்கள். ஒரு சிலர் ஆயிரம் கோடி வசூல் செய்யும் எனவும் கூறினார்கள் ஆனால் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் ஆயிரம் கோடி வசூல் செய்யாது என திட்டவட்டமாக கூறிவிட்டார். இந்த நிலையில் 7 நாள் முடிவில் லியோ திரைப்படம் 461 கோடி வசூலித்ததாக 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால் இந்த வசூல் உண்மை இல்லை தயாரிப்பு நிறுவனம் தொகையை உயர்த்தி கூறுகிறார்கள் என பலரும் குற்றச்சாட்டு எழுந்தது இந்த நிலையில் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் லலித் குமார் பொய் சொல்லணும் என்ற அவசியம் எனக்கு கிடையாது வந்த வசூலை தான் நான் அறிவித்துள்ளேன்.
தமிழகத்தில் ஐமேக்சில் தமிழ்நாட்டில் வெறும் மூணே மூணு திரையரங்குகள் மட்டும்தான் இருக்கிறது ஆனால் உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறது அவற்றை தமிழ் தயாரிப்பாளர்கள் குறிவைத்து 15 நாட்களுக்கு முன்பே அவர்களுக்கு கியூ சி செய்து கண்டன்ட் கொடுக்க வேண்டும் அப்படிதான் ரிலீஸ் செய்ய முடியும்.
அந்த வகையில் ஐமேக்சில் மட்டும் லியோ திரைப்படம் 40 கோடி ரூபாய் வசூலித்துள்ளது, இது மிகப்பெரிய தொகை என படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்துள்ளார்