Leo beat jailer : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள் ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் வெளியாகிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை நிலைநாட்டியது.
அதேபோல் லியோ திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் இதற்கு முன் விஜய் வைத்து எடுத்த மாஸ்டர் திரைப்படம் 50% லோகேஷ் திரைப்படமாகவும் 50 சதவீதம் விஜய் திரைப்படமாகவும் உருவானது. ஆனால் லியோ திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் ஜானரில் உருவாகியுள்ளது. அதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் பிரபலங்களிடையேவும் அதிகரித்துள்ளது.
மேலும் லியோ திரைப்படத்திலிருந்து வெளியாகிய முதல் பாடல் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் leo திரைப்படத்தின் ஆடியோ லான்ச் எங்கு வைக்கலாம் என பட குழு திட்டமிட்டு வருகிறது. மேலும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது வருகின்ற அக்டோபர் மாதம் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக திரையிட இருக்கிறது படக்குழு.
லியோ திரைப்படத்தின் வெளியிட்டுக்கு முன்பே ஜெயிலர் திரைப்படத்தின் சாதனையை முறியடித்துள்ளது லோகேஷ் கனகராஜன் லியோ திரைப்படம். ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகி திரைப்படம் ஜெயிலர் இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது இந்த திரைப்படம் வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படம் மாபெரும் வெற்றி என்பதால் படத்தில் நடித்த ரஜினிக்கும் படத்தை இயக்கிய நெல்சன் படத்திற்கு இசையமைத்த அனிருத் அவர்களுக்கும் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர் நிறுவனம் பிரம்மாண்ட காரை பரிசை வழங்கியது.
இந்த நிலையில் ஜெயிலர் யுகே அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங்கில் சாதனையை படைத்திருந்தது இந்த நிலையில் லியோ திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கிறது ஆனாலும் அட்வான்ஸ் புக்கிங்கில் யூ கே வில் அதிக டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு ஜெயிலர் சாதனையை முறியடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இனி வரும் நாட்களில் பல சாதனைகளை லியோ திரைப்படம் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.