லியோ படாஸ் இந்த பாடல் வரியை கவனித்தீர்களா.! யாருக்கு பதிலடி கொடுக்க இந்த வரிகள்.?

leo badass song
leo badass song

Leo : தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று லியோ இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கியுள்ளார் விஜய் இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.

மேலும் கடந்த வாரம் இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அது மட்டும் இல்லாமல் லியோ ஆடியோ லாஞ்சை மிகவும் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது ஆனால் திடீரென லியோ ஆடியோ லான்ச் கிடையாது என படக் குழு அறிவித்து இருந்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சடைந்தார்கள்.

ஏனென்றால் லியோ ஆடியோ லான்ச் நடக்கும் அதில் விஜய் குட்டி ஸ்டோரி சொல்லுவார் அதன் மூலம் பலருக்கு தக்க பதிலடி கிடைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இந்த பாடலில் உள்ள வரிகளை பார்த்தால் யாரையோ தாக்கி எழுதப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஆடியோ லான்ச் ரத்து செய்வதற்கு சில காரணங்களை படத்தின் தயாரிப்பாளர் கூறினாலும் இதற்குப் பின்னால் அரசியல் அழுத்தம் இருப்பதாக பலரும் கூறினார்கள் இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாவது சிங்கள் பாடலை விஷ்ணு எடவன் எழுதியிருந்தார். மேலும் இந்த பாடலை அனிருத் தான் பாடியுள்ளார்.

ஏற்கனவே ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன குட்டி கதை பெரும் சர்ச்சையை உருவாக்கியது இந்த நிலையில் லியோ ஆடியோ வெளியீட்டு விழா கிடையாது என்பதால் பாடலின் மூலம் விஜய் அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார் என பலரும் கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த இரண்டாவது சிங்கிள் பாடலில் கவனிக்கப்பட வேண்டிய வரிகள் ஆன “சிங்கம் எறங்குனா காட்டுக்கே விருந்து இவன் வேட்டைக்கு செதறனும் பயந்து பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றிப்புள்ளி எழுதி கொடல் உருவுற சம்பவம் உறுதி”. இந்த வரி யாரை தாக்கி எழுதியது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள் மேலும் இந்த பாடலில் பல “ராஜாக்கள பாத்தாச்சுடா இவன் கத்தி ரொம்ப கூராச்சுடா” என்ற வரியும் இணைக்கப்பட்டுள்ளது இந்த வரியும் யாரையோ தாக்கி எழுதப்பட்டுள்ளது எனக் கூறுகிறார்கள்.