Leo censor cut scene : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது ட்ரெய்லர் வெளியாகி பல சாதனைகளை படைத்து வருகிறது.
இந்த ட்ரெய்லரை பார்த்தால் பல தகவல்கள் அனைவருக்கும் தெரிய வந்தது மேலும் ட்ரெய்லரில் இரண்டு விஜய் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் லியோ விஜய் ரவுடிகள் துரத்துவதற்கு பதிலாக ஒண்ணுமே தெரியாத அப்பாவி விஜய் பார்த்தியை ரவுடிகள் துன்புறுத்துவார்கள். அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ திரைப்படத்தின் சென்சார் தகவல்.. எல்லாம் லோகேஷ் கையில தான் இருக்கு..
மேலும் லியோ திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் படத்தில் கெட்ட வார்த்தை பயன்படுத்துள்ளீர்கள் அது குறித்து கேட்கப்பட்டது அதற்கு லோகேஷ் கனகராஜ் கெட்ட வார்த்தையை விஜய் பேசவில்லை அந்த கதாபாத்திரம் தான் பேசியது இதற்கும் விஜய்க்கும் சம்மந்தமே கிடையாது முழுக்க முழுக்க நான் மட்டுமே காரணம் எனக் கூறியிருந்தார்.
மேலும் படத்தில் சென்சார் குழுவினர்கள் சில காட்சிகளை தூக்கி விட்டார்களாமே என தொகுப்பாளினி கேள்வி எழுப்பினார் அதற்கு பதில் அளித்த லொகேஷ் கனகராஜ் 12 வயதிற்கு மேல் சில காட்சிகள் பார்க்கும்படியாக இல்லை எனவும் 18 வயது நபர்கள் கூட பார்க்க முடியாத அளவிற்கு கொஞ்சம் கொடூர காட்சிகள் இருந்ததாகவும் லோகேஷ் கூறியிருந்தார் அது மட்டும் இல்லாமல் ஆக்ஷன் காட்சிகளில் சில காட்சிகளை வெட்டி தூக்கி எறிந்து விட்டார்கள்.
அந்த காட்சிகள் இருந்தால் இன்னும் படம் நன்றாக வந்திருக்கும் என்பது போல் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். எல்லோரும் ஒரே இடத்தில் பப்ளிக்கா பார்க்கும் பொழுது அந்த விஷயம் தவறாக இருப்பது போல் அவர்களுக்கு தெரிந்தது அதனால் அந்த காட்சியை தூக்கி விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் கெட்ட வார்த்தைகள் சில இடங்களில் மியூட் செய்யப்பட்டுள்ளது எனவும் லோகேஷ் கனகராஜ் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆக்ஷன் காட்சிகளை தூக்கி விட்டார்களா அந்த ஆக்ஷன் காட்ச்சி மிரட்டலாக இருந்திருக்குமே என தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.