leo : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் பாபு ஆண்டனி. வில்லனாக நடித்து பேரையும் புகழையும் பெற்றவர் குறிப்பாக தமிழில் சரத்குமார், அஜித், ஜெயம் ரவி போன்ற டாப் நடிகரின் படங்களில் வில்லனாக நடித்து உள்ளார். இப்படிப்பட்ட பாபு ஆண்டனி நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடித்து வருகிறார்.
லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது நாளை டிரைலர் வெளியாக மிரட்ட இருக்கிறது.
இந்த நிலையில் பாபு ஆண்டனி லியோ திரைப்படம் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. லியோ படத்தின் காஷ்மீர் போர்ஷன் இதற்கு முன் தென்னிந்திய படங்களில் இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாகவும், புதிதாகவும் இருக்கும் என்றார் இயக்குனர் லோகேஷ் லியோ படத்துக்கு இரண்டு பாகம் வருவது போல் தான் இயக்க உள்ளார் என்றும் கூறினார்.
மேலும் பேசிய அவர் லியோ படத்தில் சஞ்சய் தத் முதல் அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும் நடிகர், நதிகளை விட அந்த படத்தின் கதை மிகவும் பிரமாண்டமானது என்கின்ற சூப்பர்ரான விஷயத்தையும் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ஆசை இதுதான்.! நடிகை மீனா கூறிய சுவாரசியமான தகவல்..
லியோ படம் நிச்சயமாக ரஜினிகாந்தின் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை முறியடிக்கும் தன்மை கொண்டது என தனது கருத்தையும் அவர் கூறியிருந்தார். பாபு ஆண்டனி சொல்வதை எல்லாம் பார்த்தால் நிச்சயம் லியோ மிகப்பெரிய ஒரு சம்பவத்தை செய்ய இருக்கிறது எனக் கூறி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.